கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நபர்களுக்கு ஊக்கத்தொகை!! அரசு அதிரடி!!

0
230

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நபர்களுக்கு ஊக்கத்தொகை!! அரசு அதிரடி!!

அமெரிக்காவில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு 100 டாலர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அந்த நாட்டு அதிபர் ஜோ பைடன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடுமையாக பாதித்து இருந்தது. தீவிரமான நோய் தடுப்பு நடவடிக்கைகள் மூலமாக கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அப்படி குறைந்து இருந்தாலும், அமெரிக்காவில் டெல்டா வகை வைரஸானது மிகவும் தீவிரமாக பரவி வருகிறது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் அங்கு தடுப்பூசி போடும் பணி அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அத்துடன் அமெரிக்காவில் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் நபர்களுக்கு 100டாலர் வழங்கப்படும் என்று அந்த நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கின்றார்.

அதுமட்டுமில்லாமல் பரிசோதனைகளை அதிகரிக்குமாறு வலியுறுத்தி இருக்கிறார். அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபாசி, அமெரிக்காவில் சில வாரங்களாக தொற்று பாதிப்பு 80 சதவீதத்துக்கும் மேல் அதிகமாக இருப்பதாகவும், டெல்டா வகை வைரஸ் பரவலால் தான் அதிகமாக இருப்பதாக கூறியுள்ளார்.

தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின் அதிக நபர்கள் மருத்துவமனைகளில் வந்து அனுமதிக்கப்படுவது குறைந்து இருப்பதாகவும் தெரிவித்து இருக்கின்றார். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் சில இடங்களில் தற்போது தடுப்பூசி செலுத்துவதில் வேகம் குறைந்து காணப்படுவதால், அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 100 டாலர்கள் வழங்கப்படுவதாக அந்த நாட்டு அதிபர் ஜோ பைடன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.

Previous articleதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட்15 வரை நீட்டிப்பு!! திரையரங்குகள் திறக்க அனுமதி!!
Next articleநயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்துள்ள தொழிலில் எவ்வளவு முதலீடு செய்தார்கள் தெரியுமா?? இத்தனை கோடியா கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here