தமிழகத்திற்குள் வருவதற்க்கு இனி இது கட்டாயம்!! அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

0
171

தமிழகத்திற்குள் வருவதற்க்கு இனி இது கட்டாயம்!! அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

கேரள மாநிலத்தில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் சான்றிதழ் கட்டாயம் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.

நாடு முழுவதும் இரண்டாவது அலையின் பாதிப்பு கட்டுக்குள் வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. மகாராஷ்டிரா, கேரளா மற்றும் கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக தமிழகத்தில் தொடர்ந்து வைரஸ் பாதிப்பு குறைந்து தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

நேற்று மட்டும் தமிழகத்தில் 1986 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. சுமார் 23 மாவட்டங்களில் தினசரி கோரோனா பாதிப்பானது அதிகரித்திருக்கின்றது. தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் பல முக்கியமான கோவில்களை மூட மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டு இருக்கின்றன.

அத்துடன் பொதுமக்கள் அதிகமாக கூடும் வணிக வளாகங்கள் போன்ற இடங்களை மூடவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையில் ஆகஸ்ட் 5 முதல் கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் சான்றிதழ் கட்டாயம் என மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கின்றார்.

மேலும், 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்றிதழை காட்டினாலும், தமிழகத்திற்குள் வரலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அடுத்து விமான நிலையங்களில் 13 நிமிடங்களில் கொரோனா முடிவை அறிவிக்க நடைமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.

Previous articleகாவல் துறையினருக்கு ஹேப்பி நியூஸ்!! காவலர்களின் உறவினர்கள் மகிழ்ச்சி!! இனிமே ஜாலிதான்!!
Next articleஇதுவரை எந்த ஒரு நடிகரும் படைத்திராத சாதனையை படைத்த தளபதி!! இது உண்மையிலேயே ரொம்ப பெரிய சாதனைதான்!!