செந்தில் பாலாஜியை கட்டம் கட்டும் அமலாக்கத் துறை! அமித்ஷாவின் திட்டம் பலிக்குமா?

0
117

தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் செந்தில் பாலாஜி பதவியில் இருந்த சமயத்தில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து பணம் பெற்று மோசடி செய்ததாக அவர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தார்கள்.அதில் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது0 அந்த வழக்கை சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது அதற்கு காரணமாக தெரிவிக்கப்படுவது என்னவென்றால் புகார் கொடுத்தவர்களே தங்கள் புகாரை வாபஸ் பெற்றதன் காரணமாக, அந்த வழக்கு ரத்து செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், மீதமிருக்கும் இரண்டு வழக்குகளின் அடிப்படையில் சட்ட விரோதமாக பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மீது மத்திய அரசின் அமலாக்கத்துறை சென்ற வாரம் ஒரு வழக்குப்பதிவு செய்து இருப்பதாக தகவல் கிடைத்தது. இது குறித்து மதுரையில் அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது.

கரூர் மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இரண்டு மிகப்பெரிய சக்தியாக இருந்த செந்தில் பாலாஜி மற்றும் எம் ஆர் விஜயபாஸ்கர் ஆகிய இருவருக்கும் அரசியல் பகை மற்றும் அவர்களுக்கும் தனி நபர் பகையாகவும் உருவெடுத்தது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முன்னாள் அமைச்சர்கள் மீது நடக்கும் முதல் சோதனையாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்ஐ குறி வைக்கும் விதமாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனைகள் செய்தனர். அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.ஆனால் முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தற்சமயம் திமுகவிற்கு தாவி அந்த கட்சியில் இன்று தேர்தலில் வெற்றியும் அடைந்து அமைச்சராக உயர்ந்து விட்ட நிலையில், தற்போது சோதனை நடத்தப்படும் முன்னாள் அமைச்சர்களின் பட்டியலிலிருந்து செந்தில் பாலாஜியை விடுவித்து விட்டது தமிழக அரசு என்று சொல்லப்படுகிறது.

இவையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த அதிமுக தலைமை சத்தமே இல்லாமல் டில்லிக்கு தகவல் அனுப்ப அதன் காரணமாக தான் தற்சமயம் தமிழகத்தில் அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜியை குறிவைத்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அமலாக்கத்துறை தன்னுடைய நடவடிக்கையை ஆரம்பித்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது. செந்தில்பாலாஜி தன்னுடைய மாநில அரசின் அதிகாரத்தை வைத்து விஜயபாஸ்கரையும் மற்றும் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் மேலே இருக்கின்ற பாஜகவின் அரசை குறிவைத்து செந்தில்பாலாஜியையும் கட்டம் கட்டி வருவதாக கரூர் மாவட்ட அரசியல் மற்றும் தொழில் வட்டாரங்களில் பேச்சுவார்த்தைகள் அடிபட்டன.

எம் ஆர் விஜயபாஸ்கர்ஐ தவிர்த்து தற்போதைய தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலையும் செந்தில் பாலாஜி மீது ஒரு கண் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. காரணம் அவரும் கரூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக ஒட்டுமொத்தமாக கரூர் மாவட்டத்தில் பவர்ஃபுல்லாக இருக்கும் அவர்களை ஒழித்துக் கட்டிவிட்டு அந்த இடத்தில் தன்னுடைய ராஜாங்கத்தை தொடங்குவதற்கு பாஜக முயற்சி செய்கிறது என்று சொல்லப்படுகிறது.

முன்னரே ஒரு முறை டெல்லிக்கு சென்றிருந்த ஓபிஎஸ் இடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் ஐந்து முக்கிய நபர்களின் மீது நாங்கள் கண் வைத்திருக்கிறோம் என்று தெரிவித்திருந்தார். அந்த ஐந்து பேரில் தற்போது அமலாக்கத்துறை சோதனையில் சிக்கி இருக்கும் செந்தில்பாலாஜியும் ஒருவர் என்று சொல்லப்படுகிறது. மற்ற நால்வர் யார் என்பதும் திமுக வட்டாரங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.