வரும் ஆண்டில் சென்னை மாநகரம் மூழ்கிவிடும்! நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
கடல் நீர் மட்டம் உயர்வது தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா ஆய்வு நடத்தியது.பருவநிலையில் ஏற்படும் மாற்றம் தொடர்பாக வெளியான அறிக்கையில் கடல் நீரின் மட்டமானது புவியின் வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக அதிக அளவில் உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து இந்த நூற்றாண்டு இறுதிக்குள் உலகில் உள்ள முக்கிய கடலோர நகரங்களில் எவ்வளவு மட்டம் கடல் நீரானது உயர கூடும் என்ற கணிப்பை நாசா வெளியிட்டுள்ளது.நாசாவின் இந்த கணிப்பின்படி இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்கள் பற்றி அதிர்ச்சியான தகவல் வந்துள்ளது.இந்தியாவை சேர்ந்த சென்னை,மும்பை,கொச்சி,விசாகபட்டினம் உள்ளிட்ட 12 நகரங்கள் அடுத்த நூற்றாண்டான 2100ம் ஆண்டில் கடலில் மூழ்கி விடும் அபாயம் உள்ளதாக இந்த கணிப்பு கூறுகிறது.அந்த நகரங்களின் விவரங்கள்:
* கண்ட்லா, குஜராத் – 1.87 அடி
* ஒக்ஹா, குஜராத் – 1.96 அடி
* பவுநகர், குஜராத் – 2.70 அடி
* மும்பை, மகாராஷ்டிரா- 1.90 அடி
* மோர்முகாவ், கோவா – 2.06 அடி
* மங்களூர், கர்நாடகா – 1.87 அடி
* கொச்சி, கேரளா – 2.32 அடி
* பரதீப், ஒடிசா- 1.93 அடி
* கிதிர்பூர், கொல்கத்தா – 0.49 அடி
* விசாகப்பட்டினம், ஆந்திரா – 1.77 அடி
* சென்னை, தமிழ்நாடு – 1.87 அடி
* தூத்துக்குடி, தமிழ்நாடு – 1.9 அடி
மேலும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசாவானது இந்த கணிப்பில் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை மற்றும் தூத்துக்குடி ஆகியவை ஆபத்தான நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.இந்த அறிக்கை மிகவும் அதிர்ச்சியளிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.