அடேங்கப்பா பள்ளிக்கல்வித்துறைக்கு இத்தனை கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடா?

0
143

தமிழக பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு 32, 599.54 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2021 மற்றும் இருபத்தி இரண்டாம் வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறையை மேம்படுத்துவதற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று தெரிவித்திருக்கிறார்.

அப்படி செயல்படுத்தப்பட்டு வரும் பள்ளிக் கல்வித்துறைக்கான திட்டங்கள் என்னென்ன என்பதை இங்கு காண்போம்.

அரசு பள்ளி மாணவர்களின் அரசு பள்ளி மாணவர்களின் கணினி அறிவை உறுதி செய்வதற்காக 11 18 கோடியில் நடுநிலைப்பள்ளிகளில் ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் தெரிவித்திருக்கிறார் மாணவர்களுக்கு அடிப்படை கல்வியறிவு கணித அறிவை உறுதி செய்வதற்காக 66.70கோடி ரூபாயில் எண்ணும் எழுத்தும் இயக்கம் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

413 கல்வி ஒன்றியங்களுக்கு தலா 40 தொடுதிரை கையடக்க கணினிகளும் ஒரு ரூபாய் வரி 3.22 கோடியில் கொடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றனர். மாணவர்கள் மனப்பாடம் முறையில் இருந்து விலகி சிந்திக்கும் திறனை ஊக்குவிப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார். கற்றல் செயல்பாட்டில் முதல் மூன்று இடங்களில் தமிழகத்தை கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார்.

தொலைதூர பகுதிகளில் 12 தொடக்கப் பள்ளிகள் புதிதாக அமைக்கப்படும் 2012ஆம் ஆண்டில் 76 சதவீதமாக இருந்த அரசுப்பள்ளி மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 2020 ஆம் வருடத்தில் 53 ஆக குறைந்திருக்கிறது. இதனை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்த அவர் பள்ளிகளில் கழிவறை குடிநீர் ஆயுதங்கள் போன்றவை முறையாக இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு பள்ளிக்கல்வித்துறைக்கு என்று தனித்துவமான மாநில கல்வி கொள்கை ஏற்படுத்த உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்படும் பள்ளிக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்விதமாக 32 ஆயிரத்து 599 54 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.
865 உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் ரூபாய் 20 பூண்டு 76 கோடியில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும். அதோடு அரசு பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்குவதற்கு மாதிரிப் பள்ளிகள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல உயர்கல்வித் துறைக்கு 5360 9.9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் தமிழகத்தில் புதிதாக 10 கலை அறிவியல் கல்லூரிகள் ஆரம்பிக்கப்படும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் ஒன்றிணைந்து தமிழ்நாடு ஆளில்லா விமான கழகம் அமைக்கப்படும் என்று அவர் பட்ஜெட்டில் தெரிவித்திருக்கின்றார்.

Previous articleபட்ஜெட் உரையை புறக்கணித்த அதிமுக! சட்டசபை உறுப்பினர்கள் வெளிநடப்பு!
Next articleதமிழ் சினிமாவில் வடிவேலுவுடன் நடித்த நடிகர் மறைவு! ரசிகர்கள் வருத்தம்!