ஜெயலலிதா கொலை வழக்கில் முக்கிய தகவல்!ஆறுமுகசாமி ஆணையம் என்ன சொல்கிறது?
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மரணம் குறித்தான விசாரணை பல மாதங்களாக நடந்து வருகிறது.முன்னால் உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நான்கு வருடங்களாக நடந்து வருகிறது.ஆறுமுகசாமி ஆணையம் இன்னும் விசாரணையை முடிக்காமல் இருப்பதால் சமீபத்தில் மேலும் ஆறு மாத காலம் ஆணையத்தை நீட்டிப்பு செய்தது.இந்த வழக்கிள் பல நாட்களாக விசாரணை நடந்துகொண்டு இருப்பதால் வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை விரைந்து முடிக்குமாறு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
2017ம் ஆண்டு அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாகக் கூறியதால்தான் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது.தொண்டன் சுப்பிரமணி என்பவரின் மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.நீதிபதி சன்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது.இந்த விசாரணையில் ஆறுமுகசாமி ஆணையம் பதிலளித்தது.ஏறத்தாழ 90% விசாரணை முடிவடைந்தது என்றும் இதுவரை 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் இடையில் அப்போல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் விசாரணை நிறுத்தப்பட்டது எனவும் ஆணையம் விளக்கம் கொடுத்தது.இதிலிருந்து ஆறுமுகசாமி ஆணையம் தங்கள் தரப்பு தாமதத்திற்கு சரியான முறையில் பதிலளித்தது.
உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு ஆகஸ்ட் 25ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாகவும் ஆறுமுகசாமி ஆணையம் கூறியது.இதனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொலை வழக்கின் விசாரணை விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமிழக மக்களும் எப்போது தான் இந்த கொலை வழக்கின் மர்மம் முடிவுக்கு வரும் என நீண்ட நாட்களாகக் காத்திருக்கின்றனர்.