இந்த நாடுகள் எல்லாம் போக்குவரத்தை தொடங்கலாம்! அரசு அதிரடி அறிவிப்பு!
இந்தியாவில் கடந்த ஆண்டு முதலே கொரோனா தொற்றின் காரணமாக பல பிரச்சனைகளை நாட்டு மக்கள் சந்தித்து வருவது குறிப்பிடத் தக்கது. அதிலும் முதல் கொரோனா அலையை விட இரண்டாம் அலை மிக மோசமாக மக்களை பழி வாங்கியது யாராலும் மறக்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது.
இந்த இரண்டு அலைகளிலும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன இதன் காரணமாக பல்வேறு உலக நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்தை ரத்து செய்தன. அதிலும் இந்தியாவில் கொரோனா ருத்ர தாண்டவம் ஆடியது.
அந்த வகையில் குவைத்தும் இந்தியாவுக்கான பயணிகளின் விமான போக்குவரத்தை கடந்த ஏப்ரல் மாதம் முதலே ரத்து செய்தது. இந்நிலையில் இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றில் இருந்து மக்கள் மீண்டு வந்ததோடு, கொரோனாவின் பாதிப்பும் படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே மீண்டும் இந்தியாவுடனான விமான போக்குவரத்து தொடங்குவதாக குவைத் அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இது குறித்து குவைத் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியா, எகிப்து, வங்காளதேசம், பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் என்றும் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் இனி அனைவரும் விமான போக்குவரத்தை தொடரலாம் எனவும், மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்து உள்ளனர்.