காபூலில் இவ்வளவு உயிரிழப்புகளா? தாலிபான்கள் என்ன சொல்கிறார்கள்?
ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கடந்த ஞாயிற்றுகிழமை கைப்பற்றினர்.இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் பலரும் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேறினர்.இவர்கள் வேறு நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.இன்னும் சில மக்கள் நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்து வருகின்றனர்.இதனிடையே தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களை நோக்கி தங்களைக் கண்டு அச்சம் அடைய வேண்டாம் என்றும் அரசுப் பணியாளர்கள் உடனே பணிக்குத் திரும்புமாறும் அறிவிப்பு விடுத்தனர்.
தாலிபான்கள் ஆக்கிரமிப்புக்கு முன்னரே ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று விட்டார்.மேலும் அவர் கூடிய விரைவில் ஆப்கானிஸ்தான் வரவிருப்பதாகவும் தாலிபான்களுடன் இணைந்து ஆட்சிபுரியப் போவதாகவும் இன்று காணொளி மூலம் தெரிவித்துள்ளார்.இருப்பினும் ஆப்கானிஸ்தான் மக்கள் பயத்துடனும்,பதற்றத்துடனும் காணப்படுகின்றனர்.
காபூலில் மிகவும் பதற்றமான சூழ்நிலையே நிலவுகிறது.கபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கூடியுள்ளனர்.இரண்டு நாட்களுக்கு முன்னர் தற்காலிகமாக விமான சேவையை ரத்து செய்தது ஆப்கானிஸ்தான் அரசு.தற்போது மீண்டும் விமான சேவையை அந்த அரசுத் தொடங்கியுள்ளது.மேலும் தாலிபான்கள் அங்குள்ள விளையாட்டு மையம் மற்றும் உடற்பயிசிக் கூடங்களை நேற்று தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.நேற்று சில பெண்கள் வீதியில் இறங்கி தாலிபான் அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக போராட்டம் நடத்தினர்.
உலக நாடுகள் பலவும் ஆப்கன் நாட்டிற்க்கு தங்கள் வருத்தங்களைத் தெரிவித்து வருகின்றனர்.ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய மக்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை நினைத்து கவலை கொண்டுள்ளனர்.இதனையடுத்து தாலிபான்கள் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளனர்.காபூலில் நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் விமானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர்.மக்கள் ஆப்கனை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் ஆப்கனில் அமைதியையும் முன்னேற்றத்தையும் கொண்டு வர முயற்சித்து வருவதாகவும் தாலிபான்கள் தெரிவிக்கின்றனர்.