சிறுவனுக்கு எமனான தெரு நாய்! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!
தற்பொழுது தமிழக அரசு புதிய திட்டமாக கால்நடை வளர்ப்பவர்கள் அனைவரும் வரி கட்ட வேண்டும் என கூறியுள்ளனர்.அந்தவகையில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய் ,மாடு போன்ற அனைத்துக்கும் 10 முதல் 50 வரை வரி பணம் கட்ட வேண்டும் என கூறியுள்ளார்.சில மாதங்களுக்கு முன்பு வெறி நாய் கடித்ததில் இளைஞர் ஒருவர் சேலம் அருகே இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்பொழுது அதேபோல ஒரு சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி என்ற பகுதியில் வசித்து வருபவர் தான் இவருக்கு ஏழு வயது ஆகிறது.பூவிருந்தவல்லி பகுதி மோனிஷ் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான்.
அவர் தெருவிலேயே வெறிநாய் ஒன்று சுற்றி வந்துள்ளது.மேலும் இந்த வெறிநாய் விளையாடிக்கொண்டிருந்த மோனேஷ் சிறுவனை சரமாரியாக கடித்தது.நாய் கடித்ததும் சிறுவன் வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டுள்ளான். அக்கம்பக்கத்தினர் சிறுவனின் கூச்சலை கேட்டு ஓடி வந்த அந்த நாயை விரட்டி உள்ளனர். உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அச் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சையில் சிறுவனை நாய் கடித்தால் அவருக்கு ராபீஸ் தொற்று உண்டாகி உள்ளது என மருத்துவர்கள் கூறினர்.
மேலும் அச்சிறுவனுக்கு அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையிலும் அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சோகத்துடன் காணப்படுகின்றன மேலும் அந்த வெறிநாய் ஆனது ஐந்துக்கும் மேற்பட்ட சிறுமிகளை கடத்திருக்கிறது என்றும் கூறுகின்றனர்.தெருநாய் கடித்து இறந்ததில் அவரது பெற்றோர்கள் செய்வதறியாது திகைத்து போய் உள்ளனர்.சிலர் அந்த தெரு நாயே அந்த சிறுவனுக்கு எமனாக வந்துவிட்டது என்றும் கூறுகின்றனர்.இதுபோல தெருநாய்கள் வீதிகளில் திரிந்தால் மாநகராட்சிக்கு தகவல் கொடுக்க வேண்டும்.அவர்கள் அந்த நாயினை பிடித்து அதற்கு தகுந்த தடுப்பூசிகளை போடுவர்.