சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி!
கொரோனா தொற்றமானது கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மக்களை பாதித்து வருகிறது.இந்நிலையில் குழந்தைகளை பாதிக்காதவாறு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.மாணவர், மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் கற்பிக்கப்பட்டு வந்தது.தேர்தல் நடத்தப்பட்டால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுவிடும் என்பதால் அனைவருக்கும் ஆல் பாஸ் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.இவ்வாறு ஆல்பாஸ் செய்வதினால் மாணவர்கள் படிப்பு வீணாகிறது என பெற்றோர் தரப்பினர் கூறி வருகின்றனர் இந்நிலையில் இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.
இதனால் தமிழகத்தில் பல தளர்வுகளை நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் வெளியிட்டார்.அதில் ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் எனக் கூறினார். அதிலும் மாணவர்கள் சுழற்சி முறையிலேயே பள்ளிகளுக்கு வந்து பாடங்கள் கற்பிப்பர் என்றும் தெரிவித்திருந்தார். அவ்வாறு முதல்வர் கூறிய உடனே சேலம் மாவட்ட ஆட்சியர் மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ,மாவட்ட கல்வி அலுவலர் ,போன்ற அனைவரையும் கூட்டி பள்ளிகள் திறப்பு முன்னேற்பாடுகளை பற்றி ஆலோசனை செய்தார்.
அப்பொழுது சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கூறியது, அரசு கூறிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் நடத்தப்படவேண்டும்.சுழற்சி முறையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும்.சேலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வகுப்பறைகள் ,குடிநீர் தொட்டிகள் ,கழிப்பறைகள் ,பள்ளியை சுற்றி வளாகங்கள் அனைத்தும் மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றார்.மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்த பிறகு காலை மற்றும் மதியம் என இருவேளையும் கிருமி நாசினி தெளித்து வேண்டும் என்று கூறினார். குடிநீர் தொட்டி கழிப்பறை ஆகிய பகுதிகளிலும் கிருமிநாசினி கட்டாயம் தெளித்திருக்க வேண்டும் என்று பேசினார்.
தேபோல தடுப்பூசி செலுத்தி கொள்ளாத ஆசிரியர்களுக்கு சிறப்பு முகாம்கள் அமைத்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று கூறினார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தினம் தோறும் மருத்துவ குழு அமைத்து பரிசோதனை செய்யவேண்டும் என்று அறிவுரை கூறினார்.மாணவர்கள் பள்ளிக்கு வர அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து சீராக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதேபோல பள்ளியை சுற்றி உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றுபவர்கள் ,தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் தொடர்பு கொண்டு அங்குள்ள மாணவ ,மாணவிகளுக்கு தேவையான வைட்டமின் மாத்திரைகள் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதேபோல தனியார் பள்ளிகளிலும் விடுதிகள், சமையலறை ,குடிநீர் தொட்டிகள் என அனைத்திற்கும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்று கூறினார். பள்ளிகள் திறக்கப்படும் முன்னரே தனியார் பள்ளியில் இயங்கும் போக்குவரத்து வாகனங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை சோதனை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.அதேபோல தனியார் பள்ளிகளில் இயங்கும் போக்குவரத்து வாகனங்கள் கரோனா தொற்று விதிமுறைகளை கடைப்பிடிக்கிறதா என வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.அதேபோல மாவட்ட கல்வி அலுவலர்கள் அவர்களின் பகுதிக்கு உட்பட்ட பள்ளிகள் விதிமுறைகளை கடைபிடிக்கிறார்கள் என்பதே தினந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.