கடன் வாங்கியவர் செய்த வெறிச்செயல்! தொழிலதிபருக்கு நேர்ந்த சோகம்!
ஹைதராபாத்தில் கடன் கொடுத்த நபரிடம் கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதால் கடன் வாங்கியவர் அவரை கொலை செய்துள்ளார்.இந்த சம்பவம் ஹைதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.ஆந்திர மாநிலம் கலாபாதர் பகுதியில் தொழிலதிபர் அப்துல் சாதிக் என்பவர் ஞாயிற்றுக்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.இவருக்கு வயது 36.இவர் குப்பைகள் வாங்கும் தொழிலதிபராக இருந்தார்.
காஜிபண்டா கமாடிபுராவை சேர்ந்த அப்துல் சாதிக் இன்னொரு தொழிலதிபரான சாதிக் பின் அலிக்கு கடன் கொடுத்துள்ளார்.இந்த கடன்தொகையானது எட்டு லட்சம் ரூபாய் ஆகும்.இதனையடுத்து அப்துல் சாதிக் தான் கொடுத்த கடன் பணத்தை திரும்பக் கேட்டுள்ளார்.சாதிக் பின் அலி பணத்தை விரைவில் தருவதாக சமாளித்து வந்தார்.மீண்டும் அப்துல் சாதிக் பணத்தை திரும்ப தர சொல்லி அழுத்தம் கொடுத்து வந்துள்ளார்.
ஆனால் சாதிக் பின் அலி அந்த பணத்தை திரும்ப கொடுக்க முடியாமல் அவதிபட்டார்.அவர் வாங்கிய கடன்தொகையில் ஒரு பகுதியை மட்டுமே சாதிக் பின் அலி அப்துல் சாதிக்கிற்கு கொடுத்துள்ளார்.இதனால் கோபமடைந்த சாதிக் பின் அலி அப்துல் சாதிக்கை ஞாயிற்றுக்கிழமையன்று இரவில் மிஸ்ரி குஞ்சில் உள்ள தன வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.சாதிக் பின் அலி தன்னுடைய கூட்டாளிகளை அந்த பகுதிக்கு வரவழைத்து அப்துல் சாதிக்கை கொலை செய்ய திட்டமிட்டிருந்தார்.
இரவு பதினோறு மணியளவில் சாதிக் பின் அலியும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து அப்துல் சாதிக்கை அடித்தேக் கொலை செய்துள்ளனர்.கொலை செய்யப்பட்ட அப்துல் சாதிக்கின் குடும்பத்தினர் போலீசில் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளனர்.இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் கொலையாளிகளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.