கடத்தல் என்பது பொய்யான செய்தியா? மறுப்பு தெரிவித்த ஈரான்!

0
79
Is kidnapping a lie? Iran denies!
Is kidnapping a lie? Iran denies!

கடத்தல் என்பது பொய்யான செய்தியா? மறுப்பு தெரிவித்த ஈரான்!

ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் கடத்தப்பட்டது. என சில செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் அதற்கு ஈரான் நாடு மறுப்பு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆகஸ்ட் 15 ம் தேதி முதல் ஆட்சியைக் கைப்பற்றியது. தலீபான்கள் ஆட்சியமைத்ததை தொடர்ந்து, அங்கு பல்வேறு உட்கட்சிப் பூசல்கள் நிலவுகின்றன.

ஆப்கன் நாட்டிலேயே பல கிளர்ச்சியாளர்கள் உள்ளனர். எனவே விமான நிலையத்தில் அனைத்து மக்களும் கூடியுள்ளனர். இதன் காரணமாக அந்தந்த நாடுகள், தன் மக்களை அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்கா, இந்தியா, உக்ரைன்  உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீட்டு வருகின்றனர். எனவே ஆப்கன் மக்கள் அனைவரும் விமான நிலையத்தில் கூடி உள்ளனர்.

அந்த விமானம் காபூலில் இருந்த உக்ரைன் நாட்டு மக்களை மீட்டு, சொந்த நாடு திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் இருந்த ஆயுதமேந்திய கும்பலால் விமானம் ஈரான் நாட்டிற்கு கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் விமானம் கடத்தப்பட்டதாக வெளியான செய்தியை உக்ரைன் மற்றும் ஈரான் விமானப் படைத் தளபதிகள் மறுத்துள்ளனர்.

உக்ரைன் நாட்டு விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக நேற்றிரவு மஷாத்தில் நிறுத்தப்பட்டது. அதன் பின் எரிபொருள் நிரப்பி சென்றதாக ஈரானின் விமான தளபதி கூறியுள்ளார். தற்போது அது கிவ்வில் தரையிறக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியதாக தகவல்கள் தெரிகின்றன.