Breaking: வண்டலூர் உயிரியல் பூங்கா திறப்பு! அங்கு இனி இது செயல்பட தற்காலிக தடை!
கொரோனா தொற்றின் காரணத்தினால் நான்கு மாதங்களாக பூங்காக்களிலும் செயல்படவில்லை. அந்த வகையில் மக்கள் அதிகம் கூடும் இடத்தை தொற்று பரவலை தடுப்பதற்காக தற்காலிகமாக மூடப்பட்டிருந்தனர்.தற்பொழுது கரோனா தொற்றின் பாதிப்பானது தற்போது குறைந்து காணப்படுகிறது. அதுமட்டுமின்றி மக்கள் தற்பொழுது தடுப்பூசி போட முன்வந்துள்ளனர். இரண்டாம் கட்ட அலையில் இறுதியில் நெருங்கியுள்ள நிலையில் தமிழக அரசு பல தடைகளை ஏற்படுத்தியுள்ளது.அதனையடுத்து தற்பொழுது பள்ளிகள் ,கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் ,பூங்காக்கள் போன்றவை திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளனர்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் வரும் மாணவர்கள் சுழற்சி முறையில் வருகை புரிந்து பாடம் கற்பிக்கப்படும் என கூறியுள்ளனர்.அதைப்போல கல்லூரி மாணவர்கள் அனைவரும் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.அதே போல திரையரங்கில் வேலை செய்பவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அதேபோல பூங்காக்களின் வேலை பார்க்கும் நபர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருப்பது அவசியம் என்று கூறியுள்ளனர்.அதேபோல வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வரும் மக்கள் அவர்களின் விவரங்கள் ,பெயர், செல்போன் எண் போன்றவை சேகரிக்கப்படும் என கூறியுள்ளனர்.
அதேபோல வண்டலூர் பூங்காவில் வாகன சவாரி செய்வது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை வண்டலூர் பூங்கா இயக்குனர் கருணை பிரியா கூறியுள்ளார். அதேபோல வண்டலூரில் வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு இருக்கின்றனர் என வண்டலூர் பூங்கா இயக்குனர் கூறியுள்ளார். அதேபோல தொற்று பரவாமல் இருக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.