தமிழ்நாட்டில் லேசான மழை வாய்ப்பு இருக்கும் மாவட்டங்கள்!

0
200

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கின்ற ஒரு செய்தி குறிப்பில் இன்றைய தினம் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அதேபோல மற்ற கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

நாளைய தினம் கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி இருக்கின்ற உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

நாளை மறுநாள் மற்றும் 28ஆம் தேதி திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர், உதகை, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பிருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஷியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும், இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Previous articleஇந்திய அணியின் முக்கிய வீரரை புகழ்ந்து தள்ளிய கேப்டன் விராட் கோலி!
Next articleBreaking: வண்டலூர் உயிரியல் பூங்கா திறப்பு! அங்கு இனி இது செயல்பட தற்காலிக தடை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here