தமிழக முதல்வருக்கு இவ்வளவு பெருந்தன்மையா? மக்கள் மத்தியில் குவியும் பாராட்டு
பள்ளி மாணவர்களுக்கு வழங்கவுள்ள புத்தகப்பையில் முன்னாள் முதல்வர்களான எடப்பாடி பழனிசாமி மற்றும் ஜெயலிலதா உள்ளிட்டோர் இருப்பதை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அப்படியே விட சொல்லி விட்டதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
நேற்று சட்டசபையில் நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை தொடர்பான விவாதத்தில் பேசிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அப்போது அவர் பேசியதாவது,கடந்த அதிமுக ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறைக்கு 9 அமைச்சர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த துறையை கடந்த காலத்தில் அவர்கள் மியுசிகல் ஷேர் போல பயன்படுத்தியுள்ளனர்.இந்நிலையில் கடந்த ஆட்சி காலத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக இலவச புத்தக பையை 63 லட்சம் மதிப்பில் வாங்கியுள்ளனர்.
இந்த பைகளில் அப்போதைய முதல்வரான எடப்பாடி பழனிசாமி படமும்,முன்னாள் முதல்வரான ஜெயலலிதா படமும் அச்சிடப்பட்டுள்ளது.இந்நிலையில் இதுகுறித்து முதல்வரிடம் ஆலோசனை செய்ததில் அவர் அதை அப்படியே இருக்கட்டும் என பெருந்தன்மையுடன் கூறிவிட்டார்.
மேலும் இதற்காக 13 கோடியை செலவு செய்துள்ளனர்.இது மக்களின் வரிப்பணம்,அவர்களின் படங்களை மறைக்க வேண்டுமென்றால் மேலும் இது போன்ற ஒரு தொகையை செலவு செய்ய வேண்டும்.அதற்கு பதிலாக அவர்களின் படமே அதில் இருந்துவிட்டு போகட்டும். அதற்கு பதிலாக இந்த தொகை இருந்தால் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் திட்டத்தில் பயன்படுத்தி கொள்ளலாம் என்று பெருந்தன்மையுடன் கூறி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பொதுவாக கடந்த காலங்களில் இரு கட்சிகளுமே ஆட்சி மாறும் போது முந்தைய ஆட்சியாளர்களின் அடையாளங்களை மறைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளன என்பது அனைவரும் அறிந்ததே.முந்தைய திமுக ஆட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் தற்போது முதல்வராக பதவியேற்றுள்ள மு.க ஸ்டாலின் இந்த விவகாரத்தில் பெருந்தன்மையுடன் செயல்பட்டிருப்பது பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.