1 முதல் 7 ம் வகுப்புகளுக்கு நவம்பர் மாதம் பள்ளிகள் திறப்பு! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
கொரோனா தொற்றால் மக்கள் பெருமளவு பாதித்துள்ளனர்.தற்போது தான் மக்கள் அதிலிருந்து மீண்டு பழைய நடைமுறை வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில் இந்தியா முழுவதும் இரண்டாம் அலையின் தாக்கம் தான் அதிகளவு காணப்பட்டது.அதன் இரண்டாம் அலையின் ஆரம்பக்கட்ட காலத்தில் மக்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் இன்றி இருந்ததால்,அதிகளவு உயிர் சேதங்கள் நடைபெற்றது.அதனையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் விடுமுறை அளிக்கப்பட்டது.
அதனையடுத்து தற்போது இரண்டாம் அலை முடிவுக்கு வந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் பல மாநிலங்களில் திறக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.அந்தவகையில் பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும்.அதேபோல மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றெல்லாம் பல மாநிலங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை கூறியுள்ளனர்.அதேபோல தமிழகத்தில் சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது.அதனையடுத்து தற்போது கேரளாவில் கொரோனாவின் தாக்கம் சற்று அதிகாமா இருந்தது.
அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது.தற்பொழுது கொரோனா தொற்று பாதிப்பானது கேரளாவில் சற்று குறைந்து காணப்படுகிறது.அதனால் 1 முதல் 7 ம் வகுப்பு மற்றும் 10 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் மாதம் 1 ம் தேதியிலிருந்து பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.அதனையடுத்து அக்டோபர் 4 முதல் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பிற்கான இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கான கல்லூரிகள் திறக்கப்படும் என கூறியுள்ளனர்.அதேபோல பள்ளி மற்றும் கல்லூரிகளில் கேரளா அரசு கூறிய வழிகாட்டு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.