இந்த மாவட்டங்களுக்கு கெடுபிடி போட்ட தலைமை செயலாளர்! இந்த காரணத்திற்காக தானா?

0
145
The Chief Secretary who has put a damper on these districts! Is it for this reason?
The Chief Secretary who has put a damper on these districts! Is it for this reason?

இந்த மாவட்டங்களுக்கு கெடுபிடி போட்ட தலைமை செயலாளர்! இந்த காரணத்திற்காக தானா?

இரண்டரை ஆண்டுகள் கழித்தும் கொரோனா தொற்றின் பாதிப்பானது இன்றளவும் குறைந்து காணப்படவில்லை.பல வழிகாட்டு முறைகளை பின்பற்றி சில தலைவர்களுடன் ஊரடங்கு அமல்படுத்தி உள்ளனர். தற்பொழுது முதல் இரண்டாம் என்பதை கடந்து மூன்றாவது அலையை நோக்கி மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.மூன்றாவது அலையில் அதிக அளவு மக்கள் தொற்றினால் பாதிப்படையாமல் இருக்க அரசாங்கம் கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் அரசாங்கம், மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற வகையில் வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம் ஒன்றை அமைத்து வருகிறது. தற்பொழுது இந்த முகமானது மூன்று வாரங்களை கடந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் நடந்து வருகிறது. இந்த முகாமில் முதலில் 20 லட்சம் தடுப்பூசிகள் போடப்படும் என்று திட்டமிட்டிருந்தனர்.ஆனால் அவர்கள் எதிர்பார்க்காத அளவிற்கு 25 லட்சத்திற்கும் மேலாக தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.அந்த வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி அதிக அளவு மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பணிகளை சிறப்புடன் செயல்பட்ட மாவட்டமாக தேனி ,கோவை, திண்டுக்கல் ,திருச்சி ,கன்னியாகுமரி ஆகிய  மாவட்டங்களை பாராட்டி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் ஒன்று  எழுதினார்.

அதேபோல தடுப்பூசி செலுத்துவது குறித்து  மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் அதிக அளவு பின்தங்கியுள்ள   மாவட்டங்களான விருதுநகர், கள்ளக்குறிச்சி ,திருப்பத்தூர் ,தர்மபுரி ,அறந்தாங்கி, கடலூர் ,அரியலூர், வேலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கெடுபிடி போட்டு தலைமை செயலாளர் இறையன்பு அவர்களிடத்தில் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கிய மாவட்டங்களாக இந்த 13 உள்ளதாக கூறியுள்ளார்.அதுமட்டுமின்றி இந்த தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ள இந்த  பதிமூன்று மாவட்டங்களும் அதன் பணியை இருமடங்காக செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Previous articleBREAKING: பள்ளிகள் திறப்பது பற்றி ஐசிஎம்ஆர் (ICMR) ஆய்வறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! இனி மேல்நிலை பள்ளிகளுக்கு விடுமுறையா?
Next articleபள்ளிகள் அனைத்தும் செயல்படும் மாணவர்கள் வர வேண்டும் என்ற கட்டாயமில்லை! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிரடி!