முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறையினர் போட்ட அதிரடி உத்தரவு!
தற்பொழுது திமுக ஆட்சி அவற்றில் நான்கு மாதங்கள் கடந்து விட்டது இவர்கள் தேர்தலின் போது பல வாக்குறுதிகளை அளித்தனர் அதில் தற்போது வரை 202 வாக்குறுதிகள் நிறைவேற்றி உள்ளதாக கூறியுள்ளனர். இந்த வாக்குறுதிகள் கொடுத்து ஸ்டாலின் அவர்கள் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கடந்த ஆட்சியில் செய்த ஊழல் அனைத்தும் வெளிக்கொண்டு வரப்படும் என்று கூறினார்.அதற்கு ஏற்றார் போல் இவர் ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மூலம் சோதனை நடத்தினார்.
அதில் கணக்கில் வராத பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.அந்த வகையில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் .ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.அந்த அமைச்சருக்கு சம்பந்தப்பட்ட 26 -க்கு மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.இந்த சோதனையில் 25 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றினர்.எம் ஆர் விஜயபாஸ்கர் யின் மனைவி விஜயலட்சுமி மற்றும் அவரது தம்பி சேகர் பெயரில் உள்ள சொத்துக்களையும் சோதனை நடத்தினர். அதுமட்டுமின்றி விஜயபாஸ்கருக்கு பங்குதாரராக உள்ள நிறுவனங்களிலும் வருமானத்துக்கு அதிகமான சொத்துகள் உள்ளதாக வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த சொத்து சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் ,காப்பீட்டு நிறுவனங்களில் உள்ள முதலீடுகள் ,இவரது நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் பணபரிவர்த்தனை போன்றவற்றை லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.இவை அனைத்தும் வருமானத்திற்கு மீறியதாக உள்ளது. இது எம்முறையில் வந்தது என்ற பதிலை தெரிவிக்கும் விதமாக வரும் 30ஆம் தேதி எம்.ஆர் விஜயபாஸ்கரை நேரில் ஆஜராகும்படி லஞ்ச ஒழிப்பு துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.