பத்தாண்டுகளுக்கும் மேலாக தேர்தலே நடைபெறாத பகுதி கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் முதலமைச்சர்!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வந்ததை தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்தது இந்த சூழ்நிலையில், ஊரடங்கு உத்தரவு நோய் தொற்று பாதிப்பு குறைந்ததன் பெயரில் தளர்த்தப்பட்டது.

இதனால் ஊரடங்கு உத்தரவில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது இதன்காரணமாக, அத்தியாவசிய கடைகள் மற்றும் தேநீர் கடைகள் உள்ளிட்ட பலரும் செயல்படத் தொடங்கின இந்த நிலையில், தடுப்பூசி போடும் பணியும் நாடு முழுவதும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதோடு ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வழிபாட்டுத் தலங்கள், கடற்கரைகள், போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. கோவிலுக்கு விதிக்கப்பட்ட தடை இப்போதும் தொடர்ந்து வருகிறது.

இந்தநிலையில், கோவில்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். அதாவது மதுபான கடைகள் மட்டும் திறந்து இருக்கிறது, ஆனால் வழிபாட்டுத்தலங்கள் எதற்காக மூடப்பட்டிருக்க வேண்டும் என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இந்தநிலையில், நோய் தொற்று பாதிப்பு காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கினால் தமிழ்நாட்டில் கிராமசபை கூட்டங்கள் நடைபெறாமல் இருந்தன, இந்த நிலையில், கிராம சபை கூட்டங்களை நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் பல முக்கிய அரசியல் கட்சிகள் என்று அனைவரும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தார்கள்.

இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்று கட்டுப்பாடுகளுடன் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கின்ற 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி கிராம சபை கூட்டத்தை நடத்தலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.

தமிழக அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து கிராமசபை கூட்டங்களில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மிகத்தீவிரமாக தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில், மதுரை மாவட்டம் பாப்பாரப்பட்டியில் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி நடைபெற இருக்கின்ற கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க இருக்கின்றார், தற்சமயம் இதன்காரணமாக, பாப்பாபட்டி கிராமம் தமிழகத்தின் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், உள்ளிட்ட ஊராட்சி மன்றங்களில் ஊராட்சி தலைவர் பதவியை பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கின்ற காரணத்தால், 10 வருடத்திற்கும் மேலாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்து வருகிறது. இதன் காரணமாக, மேலே குறிப்பிடப்பட்ட ஊராட்சிகளில் 2006 ஆம் வருடத்தில் தேர்தலை நடத்தி ஆக வேண்டும் என்பதில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி மிகவும் உறுதியாக இருந்தார். அப்போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் அவர்கள் பல கட்ட முயற்சிகள் மேற்கொண்ட பிறகு மேற்கண்ட ஊராட்சிகளில் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்தார் என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், தற்சமயம் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்காக பரப்புரையில் ஈடுபட்டு வரும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஊரக உள்ளாட்சி தேர்தலை திமுக சரியாக நடத்தாது என தெரிவித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக தேர்தலே நடைபெறாமல் சட்டம் ஒழுங்குக்கு பாதகமாக இருந்த ஊராட்சிகளில் அமைதியாக தேர்தலை நடத்தி ஜனநாயக கடமை ஆற்றியது திமுக அரசுதான் என்பதை எதிர்க்கட்சி தலைவருக்கு பறைசாற்றும் விதத்தில் தான் பாப்பாபட்டி முதலமைச்சரை தேர்வு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.