ஐபிஎல் போராடி தோற்ற ராஜஸ்தான் அணி!

0
84

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய தினம் நடந்த 43வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், சந்தித்தன இதில் பெங்களூர் அணி ராஜஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி உதவி ஒரு பந்து வீச்சை தேர்வு செய்தார், இதனைத்தொடர்ந்து ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் எவின் லிவிஸ் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இந்த ஜோடி அந்த அணிக்கு மிக சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது.

22 பந்துகளை எதிர்கொண்ட ஜெய்ஸ்வால் முப்பத்தி ஒரு ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய லீவிஸ் 37 பந்துகளை சந்தித்து 58 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு களம் புகுந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பெவிலியன் திரும்பினார் அடுத்ததாக களமிறங்கிய அந்த அணியின் வீரர்கள் எல்லோரும் பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க இயலாமல் அடுத்தடுத்து தங்களுடைய விக்கெட்டை பறிகொடுத்தார்கள்.

ஆட்ட நேர இறுதியில் 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது சிறப்பாக பந்துவீசிய பெங்களூர் அணியின் அஷால் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனை அடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நோக்கத்துடன் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அந்த அணியின் கேப்டன் கோலி மற்றும் தேர்தல் உள்ளிட்டோர் களமிறங்கினர் இருவரும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 17 பந்துகளை சந்தித்த படிக்கல் 22 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து வந்த ஸ்ரீதர் பாரத் கோலி உடன் இணைந்து அணியின் ரன்னை அதிகப்படுத்தினார் கேப்டன் கோலி 22 ரன்னில் அவுட் ஆன நிலையில், அடுத்ததாக வந்த படிக்கல்லுடன் கைகோர்த்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். பொறுப்புடன் விளையாடிய பாரத் 44 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். ஆனால் மிகவும் அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 30 பந்துகளில் 50 ரன்களை சேர்த்தார். அதோடு அவர் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். கடைசியாக 17 .1ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 153 ரன்களை எடுத்தது பெங்களூரு அணி இதன்காரணமாக ராஜஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி செய்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபாரமான வெற்றியை கைப்பற்றியது. ராஜஸ்தான் தரப்பினரில் முஸ்தபிசுர் ரஹ்மான் அதிகபட்சமாக இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

இந்த நிலையில் இன்று இரவு ஷார்ஜாவில் நடைபெறும் நாற்பத்தி நான்காவது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியும், சந்திக்கின்றன.