இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள அனிதா பள்ளி வளாகத்தில் மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு மாத ஊக்கத்தொகையாக ரூ.5000 வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார்.
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதில், புதிய திட்டங்களும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோயில்களில் மொட்டை அடிப்பதற்கு கட்டணம் இல்லை என்ற திட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில் மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு உதவித்தொகையை வழங்குமாறு பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன.
இதனையடுத்து திருக்கோவில்களில் மொட்டை அடிக்கும் தொழிலில் ஈடுபட்டுவந்த 1749 ஊழியர்களுக்கும் மாதம் ஊக்கத்தொகை ரூ.5000 வழங்கப்படும் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் சட்டமன்ற கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள அனிதா பள்ளி வளாகத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளார் இந்த திட்டம் தொடங்குவதற்கு முதற்கட்டமாக 250 பேருக்கு மாதம் ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.