திருப்பதிக்கு வரும் பக்தர்கள் 2 டோஸ் கொரோனோ தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனோ நெகட்டிவ் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கண்டிப்பாக உடன் கொண்டு வர வேண்டுமென திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ள நிலையில் அதற்கான சான்றிதழ் எதுவும் கொண்டுவராத பக்தர்கள் திருப்பதி மலை அடிவாரத்திலேயே தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.
திருப்பதி செல்ல இலவச தரிசன டோக்கன், தரிசன டிக்கெட்டுகள் ஆகியவற்றை ஆன்லைனிலேயே முன்பதிவு செய்தி ருக்கும் பக்தர்கள் உட்பட அனைத்து பக்தர்களும் 2 டோஸ் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கோரானோ நெகட்டிவ் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் செல்லும்போது திருப்பதி மலையில் தேவஸ்தான ஊழியர்கள் பரிசோதித்தனர். ஆனாலும் பக்தர்கள் யாரும் இது போன்ற எந்த ஒரு சான்றிதழும் இல்லாமல் திருப்பதி மலைக்கு தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர்.
இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்ட திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் இன்று முதல் திருப்பதி மலை அடிவாரத்தில் பக்தர்களை தடுத்து நிறுத்தி 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை உடன் கொண்டு வந்திருக்கும் பக்தர்களை மட்டுமே திருப்பதி மலைக்கு செல்ல அனுமதிக்கின்றது.
மேலும், தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு செய்து இருந்தாலும், இதுபோன்ற சான்றிதழ்களை கொண்டுவராத பக்தர்களை திருப்பதி மலைக்கு செல்ல விடாமல் இருப்பதால், திரும்ப சொந்த ஊர்களுக்கே திரும்பி வருகின்றனர்.