தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை -சென்னை வானிலை மையம் அறிவிப்பு.!!

0
131

தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில் தமிழக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், கோவை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, பேசிய அவர் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை தொடரும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், வடகிழக்கு பருவ மழை பற்றிய அறிவிப்பு இரண்டு அல்லது மூன்று நாட்களில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் 10 நாட்களுக்கு மேல் ஆகும் என்றும் அக்டோபர் மாதத்தில் தற்போது வரை 5 சென்டி மீட்டர் அளவு மழை பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது அதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது

Previous articleராஜஸ்தான் அணியை புரட்டிப்போட்ட மும்பை அணி அபார வெற்றி.!!
Next articleஉள்ளாட்சி தேர்தலில் இன்று முதற்கட்ட வாக்குப் பதிவு தொடக்கம்.!! வாக்களர்கள் ஆர்வம்.!!