Cinema, News

ஒரே ஆண்டில் மூன்று பிரம்மாண்ட பங்களாக்களை வாங்கிய நடிகை ராஷ்மிகா.!!

Photo of author

By Vijay

நடிகை ராஷ்மிகா மந்தனா மும்பை, கோவா மற்றும் கர்நாடகா என மூன்று நகரங்களில் மூன்று பிரம்மாண்ட சொகுசு பங்களாக்களை வாங்கியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவருடைய இயல்பான நடிப்புக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்.

நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழில் இதுவரை, நடிகர் கார்த்தியுடன் சுல்தான் திரைப்படத்தில் மட்டுமே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவருக்கு தமிழ் ரசிகர்கள் தான் அதிகம்.

தற்போது, இவர் தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், மும்பையில் திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒரு அப்பார்ட்மெண்ட்டும், கோவாவில் ஒரு சொகுசு பங்களாவும், கர்நாடகாவில் குடும்பத்துக்காக ஒரு அப்பார்ட்மெண்ட்டும் வாங்கியுள்ளார். இதன் மூலம் ஒரே ஆண்டில் மூன்று நகரங்களில் மூன்று பிரம்மாண்ட சொகுசு பங்களாவை வாங்கி உள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

தளபதி 66ல் இணையவிருக்கும் விஜய்யின் ஆஸ்தான வில்லன்!

நடிகர் சிம்புவின் திரைப்படம் யூடியுபில் புதிய சாதனை.!!

Leave a Comment