மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று எம்.எல்.ஏ-வாக பதவி ஏற்பு.!!

Photo of author

By Vijay

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று எம்.எல்.ஏ-வாக பதவி ஏற்பு.!!

Vijay

Updated on:

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று எம்எல்ஏவாக பதவியேற்கிறார்.

பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமூல் காங்கிரசை சேர்ந்த ஜாகிர் உசேன் மற்றும் அமிருல் இஸ்லாம் ஆகியோருக்கு இன்று மதியம் 2 மணிக்கு மேற்கு வங்க சட்டசபையின் வளாகத்தில் பதவிப்பிரமாணம் செய்து வைப்பதாக அம்மாநிலத்தின் ஆளுநர் ஜக்தீப் தங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி மற்றும் இரண்டு திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர்களின் இடைத்தேர்தல் வெற்றி கடந்த திங்கள் அக்டோபர் 3, அன்று வெளியிடப்பட்டது. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பானது செவ்வாயன்று ECI வெளியிட்டது. வழக்கமாக, எம்எல்ஏக்களின் பதவிப் பிரமாணம் மாநிலங்களவை சபாநாயகர் தலைமையில் நடைபெறும், ஆனால் மம்தா பானர்ஜி மற்றும் இரண்டு திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர்களின் பதவிப்பிரமானமானது ஆளுநரால் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கனவே நடந்த மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு பாஜக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். தற்போது நடந்த பவானிபூர் இடைத்தேர்தலில் 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன்மூலம் இன்று பதவியேற்ற பிறகு, மம்தா பானர்ஜி மாநில சட்டமன்ற உறுப்பினராகிறார்.