விடுபட்ட 9 மாவட்டங்களில் முடிவடைந்தது முதல் கட்ட வாக்குப் பதிவு! ஒட்டுமொத்தமாக 74.37 சதவீத வாக்குகள் பதிவு!

0
79

கடந்த 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு நீண்ட இடைவேளைக்குப் பின்னர் தேர்தல் நடைபெற்றது. ஆனால் அந்த சமயத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தென்காசி, திருநெல்வேலி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த ஒன்பது மாவட்ட உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டதன் பேரில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்றையதினம் நடைபெற்றது. இதில் 74.37 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆகவே முதற்கட்டமாக அக்டோபர் ஆறாம் தேதியான நேற்றைய தினம் தேர்தல் நடைபெற்றது இதற்காக ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 698 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்தார்கள், பரிசீலனையில் 1246 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன, 14 ஆயிரத்து 571 பேர் மனுக்களை திரும்பப் பெற்றார்கள். முப்பத்தி ஒன்பது ஒன்றியங்களுக்கு உட்பட்ட எழுபத்தி எட்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கும் 755 ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கும், சுமார் 1577 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கான 12252 பதவிக்கும், முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.

இந்த சூழ்நிலையில், முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இல் நடைபெற்றது. நேற்று காலை முதல் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்ட சூழ்நிலையில், நேற்று மாலை பல வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் அதிகளவில் வருகை தந்து ஜனநாயக கடமையை ஆற்றி சென்றார்கள்.

இதன் காரணமாக, நேற்று இரவு வரையில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இதன் காரணமாக, 9 மணி வரையில் வாக்குப்பதிவு நிலவரம் வெளியிடப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. திருநெல்வேலியில் ஒட்டுமொத்தமாக 37 வாக்குச்சாவடிகளில் இரவு வரையில் வாக்குப்பதிவு நடந்ததாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று இரவு வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிட்ட தேர்தல் ஆணையம் ஒட்டுமொத்தமாக 74.4 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக கூறி இருக்கிறது அதில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 81.36 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டையில் 81 சதவீத வாக்குப்பதிவும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 80 சதவீத வாக்குப்பதிவு, திருப்பத்தூர் மாவட்டத்தில் 78 சதவீதமும், தென்காசியில் 74 சதவீதமும், கள்ளக்குறிச்சியில் 72 சதவீதமும் அதேபோல திருநெல்வேலியில் 69% செங்கல்பட்டு மாவட்டத்தில் அறுபத்தி ஏழு சதவீதமும் அதேபோல வேலூர் மாவட்டத்திலும் 67 சதவீதமும் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த சூழ்நிலையில், மீதம் இருக்கக்கூடிய 35 ஊராட்சி ஒன்றியங்களின் எதிர்வரும் 9ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 1324 ஊராட்சி தலைவர்கள், 10 1329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு இரண்டாவது கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்காக 6 652 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.