மீண்டும் அதிகரித்த பெட்ரோல் விலை.!! இன்றைய (08-10-2021) விலை நிலவரம்.!!

0
163

சென்னையில் பெட்ரோல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து பெட்ரோல் லிட்டருக்கு 21 காசுகள் உயர்ந்து ரூ.99.36 க்கும், டீசல் லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து ரூ.94.45க்கும் விற்பனையானது.

இதனையடுத்து, 2 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து ரூ.100.75க்கும், டீசல் லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து, ரூ.96.26க்கும் விற்பனையான நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து, ரூ.101.01க்கும், டீசல் லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து ரூ.96.60க்கும் விற்பனையாகிறது.

Previous articleஇந்த மாணவர்களுக்கு இனி கொண்டாட்டம் தான்! வகுப்புகளில் இருக்க முடியவில்லை என்றால் வீட்டுக்கு செல்லலாம்!
Next articleசபரிமலைக்கு மாலை போட இருப்பவரா? சபரிமலைக்கு போவதற்கு முன்பு இதெல்லாம் இருக்கிறதா?