நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. இதற்கு எதிராக அரசு பல்வேறு கடுமையான சட்டங்களை கொண்டு வந்தது ஆனாலும் கூட சில காம கொடுரர்கள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் பயப்படுகின்றனர். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. தினமும் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
இந்நிலலயில் உத்திரபிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுமியை அவரது தந்தை மற்றும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் உட்பட 28 பேர் பல வருடங்களாக அந்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதுவும் அந்த சிறுமியின் தந்தையே டிவியில் ஆபாச படங்களை போட்டு, வற்புறுத்தி பார்க்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் அளித்ததன் அடிப்படையில் இந்த 28பேர் மீதும் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.