தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்ற பிறகு முதல் முறையாக 5 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 16ம் தேதி உதகைக்கு சென்றார்.
முக்கூர்த்தி தேசிய பூங்காவை குடும்பத்துடன் சென்று பார்வையிட்ட அவர், நூற்றாண்டு பாரம்பரியமிக்க நீலகிரி மலை ரயிலில் குடும்பத்துடன் பயணம் செய்தார். அதனைத் தொடர்ந்து, புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நீலகிரி மண்ணின் பாரம்பரிய மரமான விக்கி மரம் அழிந்துவரும் பட்டியலில் உள்ளது. தற்போது விக்கி மரம் கன்றுகளை நடவு செய்து சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிலையில், மாண்புமிகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களும், அவரின் மனைவி திருமதி லட்சுமி ரவி அவர்களும், கோவையிலுள்ள ஈஷா யோகா மையத்திற்கு நேற்று சென்றனர். அங்கு சத்குருவை சந்தித்த அவர்கள் லிங்கபைரவி, தியானலிங்கம் மற்றும் ஆதியோகி ஆகிய இடங்களுக்கு சென்று தரிசனம் செய்தனர்.