கொரோனாவின் 3வது அலை ஜனவரி மற்றும் பிப்ரவரியில் பாதிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் அரிவித்துள்ளனர்.
அதிகபட்சமாக சென்ற மே மாதம் 21ம் தேதி 36,184 மக்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் . அன்றைய தினம் மட்டுமே தமிழகம் முழுவதும் 467 மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் . கடுமையான முழு ஊரடங்கு அமல் படுத்தியதாலும், தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதிகப்படுத்தப்பட்டதாலும் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் குறையத் தொடங்கியது .
இப்படிப்பட்ட நிலையில் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கும் 1,500 க்கும் கீழ் தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளன. இந்நிலையில், கொரோனா 3வது அலை வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் மக்களை பாதிக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
3ஆவது அலை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வர இருப்பதாக யூகிக்கப்பட்டன. ஆனால் தொடங்கவில்லை என்பதால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 வது அலை வருவதற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 70 சதவீதம் அளவுக்கு முதல் தவணை தடுப்பூசியை மக்களுக்கு செலுத்திவிட்டால் 3வது அலை பாதிப்பை கட்டுப்படுத்த முடியும் என உலக சுகாதார நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆகியோர் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் சுமார் 6 கோடி பேர் 68 சதவீதம் முதல்தவணை தடுப்பூசியை செலுத்தி உள்ளனர். இன்னும் ஒரு வாரத்தில் 70 சதவீதம் முடிவடைந்துவிடும். இதனால் 3வது அலையின் பாதிப்பு தடுப்பூசி செலுத்திய மக்களுக்கு வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.
மேலும், மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்துக் கொள்வதை பின்பற்றினால் 3வது அலையின் பாதிப்புகள் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன.