மீண்டும் ஹீரோயினாக கலக்கப்போகும் நடிகை கோவை சரளா.!!

0
223

கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் பிரபு சாலமன் இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிகை கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளாக நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கோவை. இவர் ஒரு சில படங்களில் குணச்சித்திர கேரக்டரில் நடித்து சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தி உள்ளார்.

இவர் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்த சதிலீலாவதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இன்றளவும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், சத்யராஜ் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு இவர் ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில், இயக்குனர் பிரபுசாலமன் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் தன்னுடைய வழக்கமான பாணியில் இருந்து விலகி வித்தியாசமாக எடுக்கவுள்ளார்.

தன்னுடைய பேத்திக்கு நடந்த அநீதிக்கு எதிராக ஒரு பாட்டியின் போராட்டத்தை மையக் கருத்தாக வைத்து இந்த படத்தை எடுத்து உள்ளார்‌. இதில் பாட்டி கதாபாத்திரத்தில் கோவை சரளா நடிக்கிறார்.

மேலும், இந்த படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி கூட இடம்பெறாது என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், சீரியஸான திரைக்கதை அமைப்பில் படத்தின் நகர்வு அமையும் என்றும், தேசிய விருது உள்ளிட்ட 20க்கும் வெளிநாடுகளில் நடக்கும் விருது போட்டிக்கும் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleகுழந்தைகள் காப்பகங்களில் பிறந்தநாள் கொண்டாட தடை.!! அரசு அறிவிப்பு.!!
Next articleமக்களே உஷார்! அதிக பாதிப்பு குழந்தைகளுக்கே! நெருங்குகிறது கொரோனா 3வது அலை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here