சிறுபான்மையினர் தலையில் இடியை இறக்கிய தமிழக அரசு!

0
131

திமுக தேர்தல் சமயங்களில் சிறுபான்மையினருக்கு மட்டுமே எப்போதும் முன்னுரிமை அளிக்கும் விதத்தில் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் இதன் காரணமாக, சிறுபான்மையினர் வாக்குகள் அனைத்தும் அப்படியே திமுக பக்கம் சாய்ந்து விடும் இது காலம் காலமாக நடைபெற்று வரும் ஒரு சம்பவம்தான்.

அதோடு தமிழகம் முழுவதும் திமுக என்றாலே சிறுபான்மையினருக்கு ஆதரவளிக்கும் ஒரு கட்சி என்ற பெயர் உருவாகி இருக்கிறது. ஆனால் அதனை உடைத்தெறியும் வகையில் தற்சமயம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதாவது அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், தமிழகத்தின் தாய்மொழியாம் தமிழில் அர்ச்சனை, அதோடு கோவிலில் பணிபுரிபவர்களுக்கு மாத ஓய்வூதியம் உள்ளிட்ட பல திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

அதோடு பாஜக தமிழகத்தில் இந்துக்களுக்கு ஆதரவாக எந்த ஒரு கட்சியும் இல்லை ஆகவே இந்துக்களுக்கு நாங்கள் பாதுகாப்பு தருகிறோம் என்று தெரிவிக்கும் விதத்தில் சமீப காலமாக செயல்பட்டு வருகிறது. அதோடு பாஜகவின் ஆளுமையும் மெல்ல,மெல்ல தமிழகத்தில் தலை தூக்க தொடங்கியிருக்கிறது இதனை கருத்தில் கொண்டுதான் திமுக இவ்வாறு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சென்னை கொளத்தூரில் கபாலீஸ்வரர் கோவிலை நினைவுபடுத்தும் வகையில் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. அதற்கான பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று இந்து சமய அறநிலையத் துறை சார்பாக வெளியிட்ட விளம்பரத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் மற்ற மதத்தினர் யாரும் பங்கேற்க தகுதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை எதிர்க்கும் விதமாக சென்னையை சார்ந்த சுஹைல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு மனுவில் இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பது இந்திய அரசியல் சட்டப்பிரிவு 16 மற்றும் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது இந்த அறிவிப்பாணையை ரத்து செய்துவிட்டு அனைத்து மதத்தினரும் இடம்பெறும் வகையில் புதிய அறிவிப்பு வெளியிட இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது அந்த சமயத்தில் தமிழக அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பணி நியமன நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது. இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் இந்து சமய அறநிலையத்துறை நிதியின் மூலம் நடத்தப்படும் கல்லூரிகளில் இந்துக்கள் மட்டுமே நியமிக்க இயலும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் இந்துக்களை மட்டுமே நியமிக்க இயலும் என விதி இருக்கிறது என கூறினார்.

Previous articleஅம்மா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா? பூங்குன்றம் வருத்தம்!
Next articleதமிழகத்தில் இனி இந்த பிரச்சனைக்கு வழி இல்லை! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிரடி பேட்டி!