தமிழகத்தில் இனி இந்த பிரச்சனைக்கு வழி இல்லை! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிரடி பேட்டி!

0
111

தமிழகத்தில் நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல அதிரடி நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது, தொடக்கத்தில் அதிகரித்து வந்த நோய் தொற்று பாதிப்பு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.

அதோடு அதிமுக ஆட்சிக் காலத்தில் தடுப்பு ஊசி செலுத்தும் பணி மிகவும் மந்தமாகவே நடைபெற்று வந்ததாக சொல்லப்படுகிறது, ஆனால் தற்சமயம் தமிழகம் முழுவதும் மாவட்டம்தோறும் தடுப்பூசி முகாம்களை ஏற்படுத்தி கோடிக்கணக்கான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்தியா சீனாவிற்கு அடுத்தபடியாக 100 கோடி நபர்களுக்கு தடுப்பு ஊசியை செலுத்தி உலக சாதனை படைத்திருக்கிறது, இந்தியாவின் இந்த மாபெரும் சாதனைக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்தது தமிழ்நாடு அரசு தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

தமிழகத்தில் இதுவரையில் 57 லட்சம் நபர்கள் நோய்தொற்று தடுப்பூசியின் முதல் தவணை தடுப்பூசியை செலுத்த்திக்கொண்டு இரண்டாவது தவணை தடுப்பூசிக்காக காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தும் விதமாக எப்போதும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஏற்படுத்தப்படும் தடுப்பூசி முகாம் இந்த வாரம் சனிக்கிழமையான இன்றைய தினமே செயல்படுத்தப்பட்டு இருக்கிறது.

அந்த விதத்தில் தமிழ்நாடு முழுவதும் இன்று 50ஆயிரம் பகுதிகளில் ஆறாவது தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணி தமிழக அரசால் தொடர்ச்சியாக மிகத் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் இன்று 6வது தடுப்பூசி முகாம் நடந்து வருகின்றது. ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம் நடப்பது வழக்கம். ஆனால் அசைவ பிரியர்கள் மற்றும் மது பிரியர்களுக்காக சனிக்கிழமை ஆன இன்றைய தினம் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

இதற்கு காரணம் அசைவம் சாப்பிடுபவர்கள் மற்றும் மது அருந்துபவர்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற தவறான கருத்து தமிழகம் முழுவதும் இருந்து வருகிறது. ஆகவே அவர்களுக்கு அதனை புரியவைப்பதை விட அதற்கு முன்பாகவே தடுப்பு ஊசி செலுத்தி விடலாம் என்று நினைத்து தமிழக அரசு இவ்வாறு ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறது.

சென்ற செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி 40 ஆயிரம் மையங்களில் தொடங்கப்பட்ட முதல் தடுப்பூசி முகாமில் 28 லட்சம் நபர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது, அதேபோல இரண்டாவது மெகா தடுப்பூசி முகாமில் 16.3 லட்சம் நபர்களுக்கும், மூன்றாவது தடுப்பூசி முகாமில் 24 லட்சம் நபர்களுக்கும், தடுப்பூசி செலுத்தப்பட்டது..

அதேபோல நான்காவது தடுப்பூசி முகாமில் 17.39 லட்சம் நபர்களுக்கும், ஐந்தாவது தடுப்பூசி முகாமில் 22 லட்சத்து 52 ஆயிரம் நபர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இந்த சூழ்நிலையில், தமிழக அரசின் கையிருப்பில் 66 லட்சம் தடுப்பூசிகள் இருக்கிறது. அந்த தடுப்பு ஊசிகள் மூலமாக ஆறாவது தடுப்பூசி முகாம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் இதுவரையில் நோய்த்தொற்று மூன்றாவது அலைக்கான அறிகுறிகள் எதுவுமில்லை எனவும், ஆனாலும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், கேட்டுக்கொண்டுள்ளார்.