அம்மா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா? பூங்குன்றம் வருத்தம்!

0
166

இன்றைய அரசியல் கட்சி தலைவர்கள் பலரை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள் அது தவறான விஷயம் இதற்கு ஒரு உதாரணம் தான் நடிகர் குண்டு கல்யாணம் என்று ஜெயலலிதாவின் தனி உதவியாளர் மூன்றாம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் அவருடைய முகநூல் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, பலர் அம்மாவுடன் இன்றைய தலைவர்களை கூப்பிட்டு பேசுகிறார்கள் அது தவறு இதற்கு ஒரு உதாரணம் தான் நடிகர் குண்டு கல்யாணம் அவர்களின் நிலை. நடிகர், நட்சத்திரப் பேச்சாளர், என்பதைவிடவும் விசுவாச தொண்டனாக பயணித்து வந்தவர் நடிகர் குண்டு கல்யாணம், அவர் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பு இருந்து அதிமுகவின் தலைமையுடன் நெருக்கமாக பயணிக்கின்ற குடும்பம். தந்தை சகோதரன் இப்படி இவருடைய குடும்பமே அதிமுகவின் வெற்றிக்காக ஓய்வில்லாமல் உழைத்து வந்தது என கூறியிருக்கிறார்.

அதோடு நடிகர் குண்டு கல்யாணம் சகோதரர் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் உதவியாளர் அவர்களுடைய வழியில் இவரும் உழைத்து வருகின்றார். இவருக்கு இந்த சூழ்நிலை என்றால் அடிமட்ட தொண்டனின் நிலை என்னவாக இருக்கும்? முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் அப்படி என்ன நடந்திருக்கும் இது பலருடைய மனதில் எழும் கேள்வியாக உள்ளது. அம்மா அவருக்கு மருத்துவ உதவியாக ஒரு சில லட்சங்களை கொடுத்து இருப்பார் என்று நினைத்தால் நீங்கள் அம்மாவை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம். குண்டுகல்யாணம் நலம் பெறும் வரையில் அவருக்கு உதவி புரிய வேண்டும் என்று ஆணையிட்டு இருப்பார் ,அவருடைய குடும்பத்திற்கு பொருள் உதவி செய்திருப்பார், சிகிச்சைக்கான மருத்துவ செலவையும் கழகம் ஏற்றுக்கொள்ளும் அவ்வப்போது என்ன நடக்கிறது எனவும் தெரிந்து கொள்வார் ஜெயலலிதா என்று பூங்குன்றன் தன்னுடைய வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் மேலும் தெரிவித்திருப்பதாவது அப்படி ஆணையிட்டு பலருக்கு உதவி செய்ததை நான் நேரடியாகவே பார்த்திருக்கிறேன், செயல்படுத்தியும் உள்ளேன், அம்மாவின் மனது அவருடைய ஆசானை போல வள்ளல் மனது ஆகவே யாரையும் யாரோடும் ஒப்பிட்டு பேசாதீர்கள் தலைவர்கள் உதவ மறந்தால் என்ன தொண்டர்களே ஒன்று கூடுங்கள் அவர்களின் வாரிசுகளே நாங்கள்தான் என்பதைக் காட்டுங்கள் நாம் செய்யும் சிறு, சிறு உதவி ஒன்று சேர்ந்தால் தலைவர் மற்றும் தலைவி இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை உலகிற்கு காட்டலாம் உதவி செய்தவர்களுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள் என்று பூங்குன்றன் அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார்.

அதேநேரம் ஜெயலலிதா தமிழக அரசியல் அரங்கிலும், இந்திய அரசியல் அரங்கிலும், ஒரு இரும்பு பெண்மணியாக பார்க்கப்பட்ட அவர் எப்படிப்பட்ட அசாதாரண அரசியல் சூழ்நிலையையும் மிகவும் சாதுரியமாக கையாள்பவர் ஜெயலலிதா. அவ்வளவு எளிதில் யாரிடமும் அடிபணிய மாட்டார் தவறு என்று தெரிந்தால் அதனை உடனடியாக கண்டிப்பதோடு அந்த தவறு செய்தவர்களை தண்டிக்கவும் அவர் மறந்ததில்லை.

இதன் காரணமாக, இந்திய அரசியல் மற்றும் தமிழக அரசியலில் அவருக்கு மிகவும் கண்டிப்பானவர் அடிக்கடி கோபப்படுபவர் என்ற பெயரும் இருந்து வருகிறது. அதோடு அவருடைய ஆதரவாளர்கள் அவரை பெண் சிங்கம் என்றும் அழைத்து வந்தார்கள். ஆனால் அந்த குணத்திற்கு பின்னால் ஒரு குழந்தை மனம் இருப்பது அவருக்கு நெருக்கமான ஒரு சிலருக்கே தெரிந்திருக்கும்.