நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பொது விடுமுறை நாட்கள் அறிவித்து வருகிறது. அதன்படி, இந்த அக்டோபர் மாதம் 17 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியல் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மாநிலம் சார்ந்த பண்டிகைகள், மத விடுமுறைகள் மற்றும் பொது பண்டிகைகள் இந்த வகைகளின் கீழ் ரிசர்வ் வங்கி விடுமுறை அறிவித்துள்ளது.
அதற்கேற்ப ஒவ்வொரு மாநிலங்களுக்கும் இந்த விடுமுறை மாறுபடும். அதனால், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக தமிழகத்திற்கு மட்டும் நவம்பர் மாதத்தில் ஏழு நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
4-நவம்பர்- தீபாவளி பண்டிகை
7-நவம்பர் – ஞாயிற்றுக்கிழமை
13-நவம்பர் – இரண்டாவது சனிக்கிழமை
14-நவம்பர் – ஞாயிற்றுகிழமை
21-நவம்பர் – ஞாயிற்றுகிழமை
27-நவம்பர் – நான்காவது சனிக்கிழமை
28-நவம்பர் – ஞாயிற்றுகிழமை