மீண்டும் பாலா இயக்கத்தில் நடிக்கும் சூர்யா.!! அதிகாரப்பூர்வ அப்டேட்.!!

Photo of author

By Vijay

மீண்டும் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நேற்று நடிகர் சிவகுமாரின் 80வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு அவரது இல்லத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை அவரது மகன்களான நடிகர் சூர்யா, கார்த்தி ஆகிய இருவரும் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில், இயக்குனர் பாலாவும் கலந்து கொண்டார். அப்போது தந்தை சிவக்குமார், இயக்குனர் பாலா ஆகியோருடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சூர்யா மீண்டும் பாலா இயக்கத்தில் நடிக்கவிருப்பதை உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து சூர்யா தனது ட்விட்டர் பதிவில்,

என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்.. ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்.. 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்.. அப்பா ஆசிர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்… அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்…என பதிவிட்டுள்ளார்.

நடிகர் சூர்யா ஏற்கெனவே பாலா இயக்கத்தில் இதுவரை நந்தா, பிதாமகன் ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக நடிகர் சூர்யா-பாலா கூட்டணி இணைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.