ஜெய்பீம் திரைப்படத்தை பாராட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘ஜெய் பீம்’ இந்த படம் நாளை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவுடன் மணிகண்டன், லிஜி மோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் பிரத்தியோக காட்சிகள் நேற்று முதல் திரையிடப்பட்டு வருகின்றன.
ஜெய்பீம் படத்தை பார்த்த பலரும் படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்தப் படத்தை நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரத்தியோகமாக திரையிட்டு காட்டியது படக்குழு. அவரும் இத்திரைப்படத்தைப் பார்த்த பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “பார்வையாளர்களின் மனதில் தாக்கத்தையும் அதன் விளைவாக சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவதுதான் சிறந்தொரு கலைப்படைப்பு! நேற்று நண்பர் சூர்யா வழக்கறிஞர் சந்துருவாக வாழ்ந்துள்ள ஜெய் பீம் திரைப்படத்தை பார்த்தேன் அத்திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம்” என பதிவிட்டுள்ளார்.
பார்வையளர்களின் மனதில் தாக்கத்தையும் அதன்விளைவாக சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவதுதான் சிறந்ததொரு கலைப்படைப்பு!
நேற்று நண்பர் @Suriya_offl வழக்கறிஞர் சந்துருவாக வாழ்ந்துள்ள #ஜெய்பீம் திரைப்படத்தைப் பார்த்தேன். அத்திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம். pic.twitter.com/khinGGgRLF
— M.K.Stalin (@mkstalin) November 1, 2021
இந்த படம் பழங்குடி இருளர் இன மக்களின் வாழ்க்கை நெருக்கடிகளை உண்மை சம்பவங்களை காட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இருளர் மாணவர்களின் கல்வி நலனுக்காக தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் 2டி நிறுவனத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி வணங்கினார் சூர்யா. தற்போது, இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி நடிகர் சூர்யாவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
படம் எடுத்ததோடு நில்லாமல், பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தின் மேம்பாட்டுக்கு ரூ.1 கோடி நிதியினை வழங்கிய நண்பர் @Suriya_offl அவர்களை எத்தனை பாராட்டினாலும் தகும்!
படக்குழுவினருக்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்!#JaiBhim போன்ற படங்கள் இன்னும் ஏராளமாக வரவேண்டும்! pic.twitter.com/lF0FjySD5Y
— M.K.Stalin (@mkstalin) November 1, 2021