ஒரே நாளில் குறைந்த தங்கத்தின் விலை.!! பொதுமக்கள் மகிழ்ச்சி.!!

0
257

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ‌.104 குறைந்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.

அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

அந்த வகையில் சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 வரை குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,493க்கு விற்பனை செய்யப்பட்டு, ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.35,944க்கு விற்பனையாகிறது.

அதே போல், வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.அந்த வகையில் கிராமுக்கு 20 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.68.70க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.68,700க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Previous articleபிறந்த நாளன்று தன் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன்! காரணம் இதுதானாம்!
Next article“மனதை கனமாக்கிவிட்டது” ‘ஜெய் பீம்’ படத்தை பாராட்டிய-தமிழக முதல்வர்.!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here