கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைகடன் தள்ளுபடி- தமிழக அரசு அறிவிப்பு.!!

Photo of author

By Vijay

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகை கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு நகைக்கடன் பெற்றவர்கள் கடன் தள்ளுபடி செய்வது குறித்து ஒரு வாரத்தில் அரசாணை வெளியிடப்படும் என்றும், இதன் மூலமாக 16 லட்சம் பேர் பயனடைவார்கள் என்றும் கடந்த வாரம் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 5 சவரனுக்கு உட்பட்ட மொத்தமாக ரூபாய்.6000 கோடி நகை கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, 5 சவரனுக்கு குறைவான நகை கடன்கள் தள்ளுபடி மற்றும் ஒரு குடும்பத்திற்கு 5 சவரன் நகை கடன் தள்ளுபடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதன் மூலம் 16 லட்சம் பேர் பயனடைவார்கள் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.