நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு-தமிழக மாணவி முதலிடம்.!!

0
90

NEET- ன் தேர்வு முடிவை தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது.

மருத்துவ படிப்பில் சேருவதற்காக தேசிய அளவில் நீட் என்ற பெயரில் நீட் தேர்வு வருடந்தோறும் நடைபெற்று வருகிறது.

மருத்துவ நுழைவு தேர்வு நீட் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது ஆனால், கொரோனா காரணமாக நீட் தேர்வு செப்டம்பர் 12.2021 அன்று நடத்தப்பட்டது. இதில் சுமார் 16 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதினர்.

இந்நிலையில் NEET UG 2021-ன் முடிவை தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான meet.nta.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவைச் சேர்ந்த மிருணால் குட்டேரி, டெல்லியைச் சேர்ந்த தன்மய் குப்தா, மகாராஷ்டிராவை சேர்ந்த கார்த்திக் ஜி நாயர் ஆகியோர் முதலிடம் பெற்றுள்ளனர். இவர்கள் மூவரும் 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.

அதேபோல், தமிழகத்தில் நாமக்கல் மாணவி கீதாஞ்சலி மற்றும் மாணவர் பிரவீன் ஆகியோர் 710 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். மேலும், அர்ச்சிதா என்ற மாணவியும் 705 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.