BREAKING:4 மாவட்டங்களில் வெளுக்க போகும் கனமழை-வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!

0
129

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்துள்ள நிலையில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.

அதன்படி, இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் குமரி கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 நேரத்தில் மேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு செல்லும் என்றும். அதன் காரணமாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, தமிழகத்தில் தீபாவளி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், தற்போது மேலும், ஐந்து நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, கடலூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, மதுரை மற்றும் டெல்டா மாவட்டங்கள், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.

மேலும், மீனவர்கள் குமரி கடல், லட்சத்தீவு, கேரள கடல், தென்கிழக்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Previous articleஎன்னை உங்களின் உடன் பிறப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள்! இலங்கை தமிழர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின்!
Next articleஉச்சத்தைத் தொடும் தங்கத்தின் விலை.!! பொதுமக்கள் அதிர்ச்சி.!!