மெக்கானிக்கும் நான் தான் திருடனும் நான் தான்! நான் அவன் இல்லை பாணியில் கொள்ளை!

0
162
I'm a mechanic and I'm a thief! I spoil the style he doesn't have!
I'm a mechanic and I'm a thief! I spoil the style he doesn't have!

மெக்கானிக்கும் நான் தான் திருடனும் நான் தான்! நான் அவன் இல்லை பாணியில் கொள்ளை!

தற்சமையமாக பல திருட்டுக்கள் நடந்து வருகிறது.நாளடைவில் கொலை,கொள்ளை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.அதுமட்டுமின்றி பலர் நூதன முறயில் திருட ஆரம்பித்துவிட்டனர்.பலர் வங்கியிலிருந்து அழைப்பதாக  கூறி பல லட்சகணக்கான பணங்களை மோசடி செய்து வருகின்றனர்.அந்தவகையில் தற்போது சென்னையில் புதுவித யுக்தியை உபயோகித்து திருடி வருகின்றனர்.சென்னையில் திருவொற்றியூர் மற்றும் புதுவண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளில் அதிக மோட்டார் பைக்குகள் நாளடைவில் திருட்டு போவதாக வழக்கமாக ஒன்றாக நடந்து வருகிறது.பலர் போலீசாரிடம் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

அந்தவகையில் திருவொற்றியூர் ரயில் நிலையம் மேம்பாலம் அருகே குமார் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சென்றுள்ளார்.அவர் தனது வேலையை முடித்துவிட்டு வந்து பார்த்தபோது தனது இருசக்கர வாகனம் காணமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.பிறகு தனது இரு சக்கர வாகனம் காணமல் போனதை குறித்து அரகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.காவல்துறையினர் குமார் அளித்த புகாரை வழக்கு பதிவு செய்தனர்.தொடர்ந்து இவ்வறான வழக்குகள் குவிய தொடங்கியதால் தீவீரமாக விசாரணை நடத்த தொடங்கினர்.இதுகுறித்து திருவொற்றியூர் உதவி ஆணையர் முஹமது நாசர் தலைமையில் தனிப்படை அமைத்தும் விசாரணை நடத்தினர்.

திருட்டு போன பகுதிகளில் உள்ள சிசிடி காட்சிகள் ஆராய தொடங்கினர்.அதில் தண்டையார்பேட்டை சேர்ந்த பரமேஸ்வரி பகுதியை சேர்ந்த ஜகன் என்பவர் இரு சக்கர வாகனங்களை திருடியதாக தெரியவந்தது.மேலும் இவர் தண்டையார்பேட்டையில் இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருவதாக விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.இவர் 5 ஆண்டுகளாக இந்த கடையை நடத்தி வருவதாக கூறியுள்ளார்.இவர் காலையில் மெக்கானிக் கடையை நடத்துவதும் இரவில் மோட்டார் வாகனங்களை திருடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.மேலும் திருடிய வாகனத்தை காஜா மைதீன் என்பவரிடம் திருடிய வாகனத்தை  விற்று வந்ததாக விசாரனையில் தெரிய வந்துள்ளது.அவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleபெட்ரோல் டேங்கர் வெடித்து கோர விபத்து! சதம் அடித்த உயிரிழப்பு!
Next articleஅதிமுகவை சட்ட ரீதியாக மீட்டெடுக்க போகும் சசிகலா?