அல்டிமேட் அஜித்தின் அடுத்த பட இயக்குனர் சிவா! 5 வது முறையாக இணையும் சந்தர்ப்பம்.

0
110

அல்டிமேட் ஸ்டார் தல அஜித்துடன் 5வது முறையாக இயக்குநர் சிவா இணைய உள்ளதாக தகவல் பரபரப்பாக இணையதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் முன்னணி நடிகராக உள்ளவர் தல அஜித். கடின உழைப்பாலும், தன் திறமையாலும் நடிப்பில் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக உயர்ந்தவர் அல்டிமேட் அஜித்.

இவரின் முதல் படம் ஆசை, என தொடர்ந்து வில்லன், அட்டகாசம்,காதல் மன்னன்,என்னை அறிந்தால்,பில்லா, வீரம்,மங்காத்தா,விசுவாசம், என பல்வேறு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை தன் வசம் இழுத்தார் அல்டிமேட் அஜித்.

என்னதான் நடிப்பு ஒரு புறம் இருந்தாலும் பைக் ரைடராக இவர் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சுற்றியுள்ளார். இந்த நிலையில் இவர் நடிப்பில் வெளியாகவுள்ள வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இவர் பைக் ரைடர் மட்டுமல்லாமல் கார் ரேசரும் கூட இதற்காகவும் ரசிகர்கள் அதிகம் இவரை விரும்புவர்.

வலிமை திரைப்படம் முடிந்து இவர் அடுத்து யாருடன் இணைய உள்ளார் என எதிர்பார்த்துள்ள நிலையில், மீண்டும் இயக்குநர் சிவா உடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே, வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என சிவாவுடன் இணைந்து 4 படங்கள் நடித்த அஜித் 5வது முறையாக சிவா உடன் மீண்டும் இணைய உள்ளார். மேலும் ஆஸ்தான் V எழுத்தியல் படத்தின் டைட்டிலை வைக்க திட்டமிட்டுள்ளனர்.

சூப்பர் ஸ்டார் நடிப்பில் அண்ணாத்த படம் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்று வரும் நிலையில் மீண்டும் தனது ஆஸ்தான இயக்குநரான சிவாவை நடிகர் அஜித் தேர்வு செய்துள்ளதாக கோடம்பாக்கம் வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.