சென்னை தத்தளிக்க இதுதான் காரணம்! வானிலை ஆய்வு மைய தலைவர் சொன்ன தகவல்!

0
68
This is the reason for Chennai to tap! Information provided by the head of the Meteorological Center!
This is the reason for Chennai to tap! Information provided by the head of the Meteorological Center!

சென்னை தத்தளிக்க இதுதான் காரணம்! வானிலை ஆய்வு மைய தலைவர் சொன்ன தகவல்!

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பேய் மழை புரட்டிப் போட்டுள்ளது. அனைவருக்குமே இது மிகவும் கடினமான சூழ்நிலையாக உள்ளது. விடாமல் மழை பெய்து கொண்டு இருக்கிறது. அதுவும் குறைந்த நேரத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளது. அதன் காரணமாக தண்ணீர் வெளியேறவே வழியில்லாமல் வெள்ளக்காடாக உள்ளது.

ஏனென்றால் நாம் தண்ணீர் செல்லும் இடமெல்லாம் வீட்டுமனைகளை கட்டி தண்ணீர் செல்லும் வழித்தடங்கள் அனைத்தையும் மறைத்து விட்டோம். எனவே தண்ணீர் வெளியே செல்ல வழி இல்லாமல் அங்கங்கே தேங்கி நின்று மீது மக்களுக்கு பெரும் தொல்லை தருகிறது. பல இடங்களில் வீடுகளின் உள்ளே கூட சென்றுள்ளது.

ஆனால் தற்போது வரும் கனமழை குறித்து சென்னை வானிலை அறிவிப்பின் போது எந்தவித தகவலும் வெளிவரவில்லை. எனவே இது மக்களுக்கு மிகவும் அதிர்ச்சியான விஷயமாக உள்ளது. மேலும் அதற்கான காரணம் என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் அவர்கள் கூறும்போது இவ்வாறு கூறினார்.

வானிலை நிகழ்வுகளின் போக்கை கணிக்கும்போது நேற்று செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால் கனமழை எச்சரிக்கை எதுவும் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மிக குறைந்த நேரத்தில் 3 சென்டி மீட்டர் மழையும், தொடர்ந்து நள்ளிரவு ஒரு 1 மணி முதல் 1.45 வரை ஆறு சென்டி மீட்டர் மழையும் என அதிக அளவில் மழை பெய்துள்ளது.

மேலும் நேற்று அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை மட்டும் ஏழு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்த நிகழ்வின் பெயர் மெசஸ்கேல் பிலாமினா என்று அழைக்கப்படுகிறது என்று கூறினார். மேலும் இதனை யாராலும் முன்கூட்டியே கணிக்க இயலாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கு நுங்கம்பாக்கத்தில் 20 சென்டி மீட்டர் மழையும், அதே நேரத்தில்  மீனம்பாக்கத்தில் 11 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது மிகச்சரியான  எடுத்துக்காட்டாக தெரிவித்துள்ளார். இந்த இடங்களுக்கு இடைப்பட்ட தொலைவு வெறும் 20 கிலோமீட்டர் தூரம்தான் ஆனால் மழையின் அளவு வித்தியாசப்பட்டு இருக்கிறதல்லவா? இதுதான் அந்த நிகழ்வு என்றும் அவர் விளக்கம் தெரிவித்தார். காலம் மற்றும் தூர அளவில் வெகு குறுகிய காலத்தில் இதுபோல் அதிக கன மழை பதிவாகி இருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.