அதிமுகவின் முக்கிய புள்ளி கைது! கலக்கத்தில் கட்சித் தலைமை!
திமுக ஆட்சிக்கு வந்த முதல் பல்வேறு நடவடிக்கைகளை அதிமுகவிற்கு எதிராக எடுத்து வருகிறது. இது பத்து ஆண்டுகள் ஆட்சி அமைக்க முடியாமல் பழிவாங்கும் நோக்கில் எடுக்கப்படும் ரிவெஞ் என்று பலர் கூறி வருகின்றனர். இருப்பினும் திமுக உண்மை நிலவரங்களை தான் வெளிக்கொண்டு வருகிறது. எந்தவித பழிவாங்கும் நோக்கமும் இல்லை என்று கூறுகின்றனர். இந்த வகையில் முதலில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் மூலம் சோதனை நடத்தி பல கணக்கில் வராத ஆவணங்களை கைப்பற்றினர்.
அதனையடுத்து தற்பொழுது படிப்படியாக அதிமுகவிற்கு எதிராக அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.தர்மபுரி மாவட்டம் ஊராட்சி குழு தலைவராக இருந்தவர் தான் டி.ஆர் அன்பழகன்.இவருக்கு பென்னாகரத்தில் சொந்தமாக ஓர் கல்குவாரி உள்ளது.இந்த கல் குவாரியில் சுரேஷ் மற்றும் முத்துவேல் என்று இரு இளைஞர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கல்குவாரியில் உள்ள பொருட்களை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. அதனை முறைப்படி போலீசாரிடம் புகார் அளிக்காமல், டி.ஆர் அன்பழகன் அந்த இரு இளைஞர்களையும் கடத்தி சென்று அடித்து துன்புறுத்தியுள்ளார்.அதனையடுத்து அந்த இளைஞர்கள் அதிகளவு காயங்களுடன் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதனையடுத்து ஊர் பொதுமக்களிடம் இதுகுறித்து முறையிட்டு அவர்களின் உதவியுடன் பென்னாகரம் காவல் நிலையத்தில் டி.ஆர்.அன்பழகன் மீது புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் போலீசார் தற்பொழுது டி.ஆர் அன்பழகனை கைது செய்துள்ளனர். இவர் மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு சங்க தலைவராகவும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆள் கடத்தலுக்கு அன்பழகனுக்கு உதவியாக இருந்த மகேந்திரன் முருகன் ஆகிய இருவரும் இவருடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் கூறியுள்ளனர்.அதேபோல டி.ஆர் அன்பழகன் கைது செய்து கொண்டு செல்லும்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.