இவர்களுக்கு மட்டும் ரூ 5000 வெள்ள நிவாரண நிதி! அரசு வெளியிட்ட தகவல்!

0
85
SI abducts Rs 30 lakh in compensation for death of friend The shock that awaited the family!
SI abducts Rs 30 lakh in compensation for death of friend The shock that awaited the family!

இவர்களுக்கு மட்டும் ரூ 5000 வெள்ள நிவாரண நிதி! அரசு வெளியிட்ட தகவல்!

புதுச்சேரி மாநிலத்தில் தற்போது தான் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. முறை சட்டமன்ற தேர்தலில் ரங்கசாமி வெற்றி பெற்றார். தற்பொழுது அவர் புதுச்சேரியில் நல்லாட்சி அமைத்து வருவதாக கூறி வருகின்றனர். தற்பொழுது தான் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் குறைந்து மக்கள் நடைமுறை வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர்.இந்நிலையில் தற்பொழுது பெய்து தொடர் கனமழை காரணமாக தமிழகம் மற்றும் இதர மாநிலங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழ்நாட்டில் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட  மாவட்டங்களில் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல புதுச்சேரி மாநிலமும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பலர் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர்.அதனால் அவற்றை கருத்தில் கொண்டு அம்மாநில முதல்வர் ரங்கசாமி அவர்கள் சிவப்பு குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ 5,000 நிவாரண தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் மக்கள் பெருமளவு பயன் அடைவர் என்று கூறினார்.அவர்களுக்குமட்டுமின்றி கட்டட தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக இருப்பவர் களுக்கும் ரூ.5000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் மீனவர்களுக்கும் ரூ 5 ஆயிரம் நிவாரண தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் பாஜக தலைவரும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ 5 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பது குறித்து கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அம்மா நிலத்தைப் போலவே தமிழகத்தில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவது மக்கள் பெருமளவு பயன் அடைவர் என்று கூறி வருகின்றனர்.