பெண்ணின் பிறப்புறுப்பை கடவுளாக வணங்கும் விசித்திர கோவில்!

Photo of author

By Rupa

பெண்ணின் பிறப்புறுப்பை கடவுளாக வணங்கும் விசித்திர கோவில்!

பெண்கள் பல துறைகளில் முன்னேறி வருகின்றனர். இருப்பினும் ஒரு சில இடங்களில் பின்னோக்கி வைத்து பேசுகின்றனர். அந்த வகையில் பார்க்கும் பொழுது பெண்கள் மாதவிடாய் என ஒன்றை சந்தித்து வருகின்றனர்.

பெண்கள் முதலில் வயதிற்கு வரும் பொழுது அதனை திருவிழாவாக கொண்டாடும் நம் மக்கள் நாளடைவில் அதனை தீட்டு என்று கூறி அவர்களை ஒதுக்கி விடுகின்றனர்.இவ்வாறு நடந்து வரும் சூழலில் பெண்ணின் மாதவிடாயை விழாவாக கொண்டாடும் ஓர் ஊர் உள்ளது. அசாமில் கவுஹாத்தி என்ற பகுதியில் பிரம்மபுத்திரா நதி உள்ளது.

அங்கிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் காமாக்கியா என்ற ஒரு கோவில் உள்ளது.மேலும் அனைத்து கோவில்களிலும் சிலைகளை வைத்து வழிபடுவர். இந்த கோவிலில் மட்டும் பெண்ணின் யோனியின் வடிவத்தை சிலையாக வைத்து வழிபட்டு வருகின்றனர். அவ்வாறு பெண்ணின் பிறப்புறுப்பை யோனியாக மக்கள் ஏன் வழிபடுகின்றனர் என்பதற்கு ஓர் பெரிய புராணம் உள்ளது.சிவன் மீது அபார காதல் கொண்ட தாட்சியாயிணி அவரது தந்தை தட்சனை எதிர்த்து சிவனைத் திருமணம் செய்து கொள்கிறார்.ஆனால் தாட்சியாயினி அப்பாவிற்கு ,சிவனை பிடிக்காது.

ஏனென்றால் சிவபெருமான் திருநீறு பூசிக்கொண்டு சுடுகாட்டுக்கு செல்கிறார் என்று கூறி அவரை வெறுத்து வந்தார். தாட்சியாயினி ய தந்தை ஓர் பெரிய யாகம் ஒன்றை நடத்தினார்.இந்த யாகத்திற்கு அவரது பெண் மற்றும் மருமகனான சிவபெருமானை அழைக்காமலேயே நடத்தியுள்ளார்.

ஆனால் தாட்சியாயினிக்கு அவரது தந்தை நடத்தும் யாகத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார். சிவபெருமானிடம் அனுமதி கேட்டபோது, சிவபெருமான் நீ சென்றால் உனது தந்தை உன்னை அவமானம் செய்வார் என்று கூறியுள்ளார்.சிவபெருமான் கூறியதற்கு மாறாக தாட்சியாயினி யாகத்திற்கு செல்கிறார்.

சிவ பெருமான் கூறியதை போலவே ,அவரது தந்தை தாட்சாயாயினியை அவமானம் செய்துள்ளார். தாட்சாயாயினி அவமானம் தாங்க முடியாமல் யாகத்தை தடுக்க அந்த யாகத்தின் தீயிலே விழுந்து உயிரை மாய்ச்சிக் கொள்கிறார்.இதையறிந்த சிவபெருமான் அதிக அளவு கோபமுற்று அந்தத் தீயில் இருந்த தாட்சியணி உடலை கையில் எடுத்துக்கொண்டு ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்துள்ளார். சிவனின் ருத்ர தாண்டவத்தை தடுக்க முடியாமல் பலரும் சம்பித்து போய் நின்றனர்.

விஷ்ணு தனது கையிலுள்ள சக்ராயுதத்தை செலுத்தினார்.அவ்வாறு செலுத்தியதன் மூலம் பார்வதியின் உடல் ஐம்பத்தொரு துண்டுகளாக பூமியில் விழுந்தது.அந்த ஐம்பத்தொரு இடங்களையும் தற்போது சக்தி பீடங்களாக வழிபட்டு வருகிறோம்.பார்வதி தேவியின் யோனி விழுந்த இடம்தான் இந்த காமாக்கியா கோவில். இவ்வாறு வழிபட்டு வரும் நிலையில் பெண்களை ஒதுக்குவதை நிறுத்திவிட்டு சமமாகவே கருத வேண்டும்.