சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல்! பாதுகாப்புச் சூழலை அதிரடி ஆய்வு செய்து மத்திய உள்துறை அமைச்சர்!

0
71

சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல் மற்றும் வெளிநாட்டு பயங்கரவாதிகள் நடமாட்டம் மிகுந்து இருக்கின்ற சூழ்நிலையில், இதனை எதிர்கொள்வதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு செய்தார்.

பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாதுகாப்பு அமைப்புகள், மத்திய நுண்ணறிவுப் பிரிவு, மத்திய ஆயுதப்படை காவல்துறையினர், பாதுகாப்பு படையின் உளவுப்பிரிவு, வருவாய் மற்றும் நிதி உளவுப்பிரிவு துறை உயரதிகாரிகள், பங்கேற்றார்கள் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் டிஜிபிக்கள் காணொளி மூலமாக பங்கேற்றார்கள்.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, பயங்கரவாதம் தொடர்பான தொடர்ச்சியான அச்சுறுத்தல், சர்வதேச பயங்கரவாதிகள் நடமாட்டம், போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதத்திற்கு நிதிஉதவி, சைபர் சட்டவிரோத பயன்பாடு, உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக பாதுகாப்பு உளவுப்பிரிவு உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். நாடு தற்சமயம் எதிர்கொண்டு இருக்கின்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு தேவைப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா? என்று அவர் ஆய்வு செய்தார். என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.