ஆட்டுத்தலை க்கு பதில் தன் தலையை கொடுத்த வாலிபர்! நேர்த்திகடனில் நடந்த விபரீதம்!
நமது இந்தியாவில் பல ஊர்களில் பல கலாச்சாரங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையை பொதுவாக அம்மன் போன்ற கடவுள்களுக்கு பண்டிகைகள் நடத்துவது வழக்கம். அவ்வாறு நடத்தும் பண்டிகைகளில் மக்கள் தங்களுக்கு வேண்டிய வரம் கிடைக்க கடவுளிடம் கோரிக்கை வைப்பர். அந்தக் கோரிக்கையை கடவுள் நிறைவேற்றிக் கொடுத்தால் அவர்களுக்கு ஆடு, கோழி போன்றவற்றை வெட்டுவது வழக்கம். இது காலம் காலமாக இந்தியாவில் பல ஊர்களில் நடந்து வருகிறது.
அவ்வாறு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற நேர்த்திக்கடன் அனைவரின் மனதையும் பதைபதைக்க செய்துள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் மதனப்பள்ளி என்ற ஊரின் அருகே வலசை பள்ளி சங்கராந்தி என்ற ஒரு விழா கொண்டாடப்படுகிறது. அந்த விழாவின் ஒரு பகுதியாக ஊர் எல்லையில் உள்ள எல்லாமா கோவிலுக்கு பலர் நேர்த்திக்கடன் செய்வது வழக்கம். அந்த நேர்த்திகடனில் ஆடு கோழி போன்றவற்றை பலி கொடுப்பர். அந்த வகையில் திருவிழாவில் அந்த ஊரை சேர்ந்த மக்கள் அனைவரும் ஆடு கோழி போன்றவற்றை பலி கொடுத்தனர்.
அந்த ஊரை சேர்ந்த சுரேஷ் என்பவர் அந்த கோவிலுக்கு ஆடு ஒன்றை பலி கொடுக்க வந்தார். அப்போதும் அங்கிருந்த ஆடு வெட்டுபவர் தலை நிற்காத அளவிற்கு மது அருந்தி முழு போதையில் இருந்துள்ளார். அந்த சமயம் சுரேஷ் தன் கொண்டுவந்த ஆட்டை வெட்டுவதற்கு கொண்டு வந்து நிறுத்தினார். மது போதையில் இருந்த ஆடு வெட்டும் சலபதி ஆட்டின் தலையை வெட்டாமல் ஆட்டை பிடித்து கொண்டு இருந்த சுரேஷ் தலையை வெட்டினார். இதனால் சுரேஷ் துடிதுடித்து அந்த இடத்திலேயே கீழே விழுந்தார்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த சுரேசை அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்பு சுரேஷ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக சுரேஷ் உயிரிழந்தார். பின்பு போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தெரியாமல் நடந்த தவறா அல்லது ஏதேனும் திட்டமிட்டு செய்யப்பட்டதா என்று விசாரித்து வருகின்றனர்.