திரையுலகில் சோகம்! விஸ்பரூபம் பட கலைஞர் திடீர் மரணம்!

0
94
Tragedy on screen! Sudden death of Viswaroopam artist!
Tragedy on screen! Sudden death of Viswaroopam artist!

திரையுலகில் சோகம்! விஸ்பரூபம் பட கலைஞர் திடீர் மரணம்!

பிர்ஜூ மகாராஜ் என்பவர் மாபெரும் கதக் நடன இயக்குனர். அதுமட்டுமின்றி இவர் கதக் நடன கலைஞர்களின் மகாராஜ் எனப்படும் குடும்பத்தின் வம்சாவளியை சேர்ந்தவர். இவரின் குடும்ப உறுப்பினர்களே இவருக்குக் குருவாக இருந்து உள்ளனர். அதாவது இவரது இரண்டு மாமாக்கள் மற்றும் இவரது தந்தை ஆகியோர் இவரது குருக்கள் என கூறுகின்றனர். இவர் கதக் நடன கலைஞர்களின் மகாராஜா குடும்பத்தின் வம்சாவழி என்றாலும் மறுபுறம் ஹிந்துஸ்தானி இசையின் மேல் ஈர்ப்பால் அதனையும் கற்றுக்கொண்டார்.

அத்தோடு ஒரு பாடகராகவும் இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவருக்கு டெல்லியில் உள்ள  கலாகேந்திரா வில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். அதனை தொடர்ந்து தனது சொந்த நடனப்பள்ளி ஆனா கலாசிரமம் என்பதை திறந்தார். பள்ளியை திறந்த  பிறகு சத்யஜித் ரேயின் ,சத்ரஞ்சி கே கிலாரி என்ற திரைப்படத்தில் இவரே இசையமைத்து பாடியுள்ளார். அதுமட்டுமின்றி தேவ்தாஸ் என்ற திரைப்படத்தில் காஹே சேத் என்ற பாடலுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்தார். இவர் ராஜீவ் காந்தி தேசிய சத்பாவன விருது, பத்ம பூஷன் விருது, ஆந்திர ரத்னா விருது, என பல விருதுகளை பெற்றுள்ளார்.

விஸ்வரூபம் படத்திற்காக தேசிய விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து மிகப்பெரிய வெற்றிப்படமான பாஜிராவ் மஸ்தானி என்ற படத்தில் மோஹே ரங் தோ லால் என்ற பாடலை பாடி பூங்கி  விருதினை பெற்றார். இவருக்கு தற்பொழுது 83 வயதிற்கு மேல் ஆகிறது. இவர் சில தினங்களுக்கு முன் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவரது வீட்டில் இருந்தபோது திடீரென்று அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. வீட்டில் உள்ளவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர். மருத்துவர் அவரை சோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இவர் இறந்த செய்தி கேட்டு இவரது குடும்பத்தார் மற்றும் அவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.